தமிழ் සිංහල English
Breaking News

கருணாநிதியின் மறைவினையடுத்து அமெரிக்க அரசு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் .!

உடல்நல குறைவின் காரணமாக கடந்த 28 ஆம் தேதி நள்ளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து 11 வது நாளாக மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர்.

வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் இன்று மாலை சுமார் 6.10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் காலமானார். கலைஞர் கருணாநிதியின் மறைவினையடுத்து அமெரிக்க அரசு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி : இந்தியாவின் மிக சிறந்த தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. அவரது மறைவு கேட்டு துயரடைந்தேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் : வல்லமை வாய்ந்த மரபினை நம்மிடத்தே விட்டுச்சென்றுள்ளார் கலைஞர். அவரது குடும்பத்தாருக்கும் பொதுமக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினிகாந்த் : கலைஞர் மறைந்த இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com