தமிழ் සිංහල English
Breaking News

மு.கருணாநிதி இன்று  தனது 94 ஆவது வயதில் காலமானார்..!

தி.மு.கவின் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி இன்று  தனது 94 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவுக் காரணமாக காவேரி மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சைபெற்ற நிலையிலேயே அவர் இன்று  உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த நிலையில், திடீரென இரத்த அழுத்தம் குறைந்ததையடுத்து கடந்த மாதம் காவேரி மருத்துவமனையில்  அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு தொடர்ச்சியாக 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததோடு, பலமுக்கியஸ்தர்கள் அவரை பார்வையிட்டு வந்தனர். தி.மு.க. ஆதரவாளர்கள் இரவு, பகல் பாராது வைத்தியசாலையிலேயே முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கையூடாக தெரிவித்திருந்தது.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வயோதிபம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே சிகிச்சைபலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆதரவாளர்கள் வைத்தியசாலை முன்பு கூடியமையால் தற்போது அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com