தமிழ் සිංහල English
Breaking News

தனக்கும் ரணிலுக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் இல்லை .!

தனக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளப் படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறான தோர் ஒப்பந்தர், பிரதமருக்கும் மக்கள் விடுதலை முன்ன ணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையி லேயே செய்துகொள்ளப்பட்டு உள்ள தென்றும் கூறினார்.

இன்று (06) முற்பகல், அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு வழிபாட்டில் ஈடுப்பட்டுவிட்டுத் திரும்பும் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அநுரகுமார திசாநாயக்க, பிரதமருக்குத் தேவையான விடயத்தைப் பற்றியே நாடாளுமன்றத்தில் கதைப்பதாகக் குற்றஞ்சாட்டியதோடு இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பில், அரசாங்கம், மீண்டும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் அதிலுள்ள சில உள்ளடக்கங்கள், இலங்கைக்குப் பாதகமானவையாகக் காணப்படுகின்றனவெனச் சுட்டிக்காட்டினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com