தமிழ் සිංහල English
Breaking News

முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை.!

திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான இரவுகள் தான். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிளம்பர், எலக்ட்ரீசியன், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் தேவைப்படுவோர் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என்பதே அந்த விளம்பரம் ஆகும். இரவு 1 – 3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக இந்திய மதிப்பில் 1.80 இலட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார். இது கொஞ்சம் அசவுகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவர் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com