தமிழ் සිංහල English
Breaking News

நீச்சல் உடை உள்ளிட்ட படுகவர்ச்சியில் ஸ்ரேயா.!

முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்கெட் விழுந்தது. பட வாய்ப்புகள் தேடி வராததால் சோர்வடைந்தார்.

இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த ராசியோ என்னவோ மீண்டும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

கடந்த ஆண்டு 4 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை முடித்துவிட்டு திருமணம் செய்ய திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தநிலையில் சுமார் 6 படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தது.

ஆனால் குடும்பத்தினர் ஸ்ரேயாவின் திருமண ஏற்பாட்டை நிறுத்த விரும்பவில்லை. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரஷ்ய பாய்பிரண்ட் அண்ட்ரு கொஸ்சேவ்வை மணந்தார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா திரைப்படங்களில் நடிப்பதும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு பறப்பதுமாக இருக்கிறார். வெவ்வேறு நாடுகளில் சுற்றி வரும் அவர் டூ பீஸ் நீச்சல் உடை உள்ளிட்ட படுகவர்ச்சியான உடைகளில் போஸ் தந்து இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற ஸ்ரேயா, லோகட் டாப்ஸ் அணிந்து கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார். அத்துடன் அவர் ஒரு மெசேஜ் வெளியிட்டிருந்தார். ‘அமெரிக்காவில் ஒரு சிறுவன் அவனது கால்கள் ஏற்றத்தாழ்வாக இருப்பதால் அதற்கு நிதி திரட்டி வருகிறான். அவனுக்கு உதவுபவர்கள் விரைந்து உதவினால் ஏற்றத்தாழ்வாக இருக்கும் கால்களை ஆபரேஷன் மூலம் சரி செய்ய முடியும்’ என குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரேயாவின் இந்த கோரிக்கைபற்றி கண்டுகொள்ளாத ரசிகர்கள் அவரது கவர்ச்சியான ஸ்டில்லை லைக் செய்தும். வர்ணித்தும் மெசேஜ் செய்து வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com