தமிழ் සිංහල English
Breaking News

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது: இலங்கை வீரர் எந்த இடத்தில்?

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் மோசமான பந்துவீச்சு காரணமாக ரபாடாவின் புள்ளிகள் சரிந்ததால், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி நேற்று வெளியிட்டது. பந்துவீச்சாளர்கள் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடத்தில் இருந்தார்.

ஆனால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 97 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்ததால் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதன் காரணமாக, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

3வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும், 4வது மற்றும் 5வது இடங்களில் பிலாண்டார், அஸ்வின் ஆகியோரும் உள்ளனர்.

இலங்கை தொடரில், மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் 5 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆனால், கடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத ஸ்டெயின், 11 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த இடமான 24வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில், இரண்டு டெஸ்ட்களில் 356 ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் கருணரத்னே, 3 இடங்கள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ஸ்மித்தும், 2வது இடத்தில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும், 3வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் நீடிக்கின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com