தமிழ் සිංහල English
Breaking News

மௌனம் காக்கும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் .1

 

மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க அந்தந்த பகுதி தமிழ் மாகாணசபை உருப்பினர்களாக இருந்தாலும் சரி தமிழ் பாராளுமன்ற உருப்பினர்களாக இருந்தாலும் சரி தேவை வேண்டி குரல் கொடுப்பதில்லை. மாறாக மௌனியாக செயல்படுவதாக முரளிரகுநாதன் குற்றம் சுமத்தியுள்ளார் என பு.தொ.மு ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

அண்மையில் மஸ்கெலிய வைத்தியசாலையின் தராதரம் பற்றியும் வைத்தியர்கள் பற்றாக்குறை பற்றியும் பொதுமக்களே தேவைகளை கருதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்கள் உள்வாங்கப்பட்ட வைத்தியசாலைகளில் இவ்வாறான நிலை மையே காணப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையின் காரணமாக பெருந்தோட்ட உறவுகளே மிகவும் பாதிக்கப்படுகின்றன. என முரளிரகுநாதன் மேலும் அந்த குற்றச்சாட்டில் கருத்து தெரிவித்துள்ளதாக பு.தொ.மு ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான குறைகளை எடுத்து சொல்வது யார்.? இதை நிவர்த்தி செய்வது யார்.? பெருந்தோட்ட உறவுகளின் வாக்குகளை பெற்று மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் சென்றவர்கள் ஏன் மௌனியாக இருக்கின்றார்கள்.

மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க அந்தந்த பகுதி தமிழ் மாகாணசபை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி தேவை வேண்டி குரல் கொடுத்து நிவர்த்தி செய்வது உங்களது கடமையள்ளவா என முரளிரகுநாதன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com