தமிழ் සිංහල English
Breaking News

மஹிந்த தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் .!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் இன்றும் (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று விவாதிப்பதற்கு போதிய உறுப்பினர்கள் காணப்படாதமையினால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விவாதம் மீண்டும் இன்று நடைபெறவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,  மஹிந்த ராஜபக்‌ஷ தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலரை சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com