தமிழ் සිංහල English
Breaking News

கண்துடைப்பு போராட்டங்களில் ஈடுபடாமல் இதய சுத்தியுடன் செயல்படுங்கள் .!

பெருந்தோட்ட உறவுகளின் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக மலையக தொழிற்சங்க தலைமைகள் ஒன்றிணையாவிடின் இம்முறையும் பாதிக்கப்படபோவது பெருந்தோட்ட உறவுகளே. சுயநலன்களுக்கு அப்பால் ஒன்றினைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து செயலாற்றி நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதுதான் காலத்தின் தேவையாகும். முரளிரகுநாதன்.

பெருந்தோட்ட உறவுகளின் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக மலையக தொழிற்சங்க தலைமைகள் ஒன்றிணையாவிடின் இம்முறையும் பாதிக்கப்படபோவது பெருந்தோட்ட உறவுகளே. சுயநலன்களுக்கு அப்பால் ஒன்றினைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து செயலாற்றி நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதுதான் காலத்தின் தேவையாகும். என இன்று காலை லிந்துலை டீமலை தோட்ட மக்கள் சந்திப்பின் புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதன் தெரிவித்ததாக பு.தொ.மு. ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் எந்த தொழிற்சங்களோ கூட்டு ஒப்பந்தத்தை மளுங்கடிக்க அல்லது சீர்குலைக்க முற்பட்டாளோ இம்முறையும் பெருந்தோட்ட உறவுகளை காட்டி கொடுத்த பட்டியளில் சேர்க்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என முரளிரகுநாதன் அளுத்தத்துடன் மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளதாக பு.தொ.மு. ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட உறவுகள் மேல் உண்மையான நேசம் இருந்தால் வெருமனே கண்துடைப்பு போராட்டங்களில் ஈடுபடாமல் இதய சுத்தியுடன் செயல்படுங்கள் என முரளிரகுநாதன் மேலும் மக்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என பு.தொ.மு. ஊடங்கங்களுக்கு அனுப்பிய செய்தி`யில் தெரிவித்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com