தமிழ் සිංහල English
Breaking News

ரயில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான சேவைகள் பாதிப்பு.!

பொல்கஹவெலயில் இருந்து பேராதனைக்கு எரிபொருள் எடுத்துச்சென்ற ரயில் வண்டி பேராதனை ரயில் நிலையத்திற்கருகில் வைத்து தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் நேற்று (19) தடைப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. எரிபொருள் தாங்கியுடன் கூடிய ரயில்பெட்டி ரயில் பாதையை விட்டும் விலகியதால் கண்டி கொழும்பு ரயில் பாதை சேதமடைந்தது.

இதனால் கண்டி வரையான பல ரயில் சேவைகள் கடுகண்ணாவ வரை மட்டுப்படுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் கூறியது. நேற்று மாலை வரை ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன. (நி/வி)

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com