தமிழ் සිංහල English
Breaking News

பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம்   பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. .!

முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த  கோத்தபாய ராஜபக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கருத்துக்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

அவரும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகின்றாராயின் அவரிடம் தமிழ் பேசும் மக்களின்  சார்பில் கேட்கப்படவேண்டிய பல கேள்விகள் உள்ளன.

அதன்படி இவ்வாரம்  கோத்தபாய ராஜபக் ஷவிடம் பல்வேறு   கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதற்காக அவரை சந்தித்தேன்.எனக்கு வழங்கப்பட்டிருந்த   குறிப்பிட்ட காலநேரத்தில் முடியுமானவரை  தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவரிடம்  கேள்விகளை எழுப்பினேன்.  அவர் எனது   கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம்.

கேள்வி : இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?

பதில் : நான் இந்நாட்களில்  வியத்மக  அமைப்புடன்   இணைந்து  செயற்பட்டு வருகின்றேன்.தொழில்சார்  நிபுணர்களே இந்த அமைப்பில் இருக்கின்றனர்.வர்த்தகர்கள்இ  தொழில்நிபுணர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இந்த அமைப்பில் உள்ளனர்.நாட்டின்  தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலேயே  இதனூடாக   ஆராய்ந்து வருகின்றோம்.அத்துடன் பல்வேறு தரப்பினர் வந்து எம்மை சந்தித்து பேசுகின்றனர்.

கேள்வி : ஏன் இந்த அமைப்பின் ஊடாக   நீங்கள் செயற்பட்டு வருகின்றீர்கள்?

பதில் : என்னை சந்திக்க வருகின்ற  தொழில்சார் நிபுணர்கள் ஒருவிடயத்தை கூறுகின்றனர்.அதாவது  தற்போது நாட்டின் முன்னேற்றத்துக்காக தொழில்சார் நிபுணர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக   அவர்கள் என்னிடம் குறைகூறினர்.நாட்டின் நிர்வாகத்தில் அவர்கள்   பங்கெடுக்காமல் இருக்கின்றனர்.பயன்படுத்தப்படாமல் இருக்கின்றனர் என்று கூறலாம். அதனால் இந்த அமைப்பை  ஆரம்பித்துச் செயற்பட்டுவருகின்றோம்.

கேள்வி : எவ்வாறான பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளீர்கள்?

பதில் : பொதுவாக   கல்விப்பிரச்சினை இன்று பாரிய  பிரச்சினையாக இருக்கின்றது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக கல்விப்பிரச்சினையே காணப்படுகின்றது.பொருளாதாரத்தை கட்டியெழுப்பஇ தொழில்வாய்ப்பை  உருவாக்கஇ வறுமையைப் போக்கஇ கல்வியே அவசியமாகும்.  ஆனால் இன்று கல்வித்துறையில் பாரிய நெருக்கடிகள் காணப்படுகின்றன.அதற்கு மேலதிகமாக பொருளாதாரப் பிரச்சினையும் காணப்படுகின்றது.பொருளாதார கட்டமைப்பில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.ஆசியாவுக்கான பயணத்துடன் எமது பொருளாதாரம் நகராமல் இருக்கிறது.

கேள்வி : யுத்தத்தை முடித்ததில்  உங்களுடைய மிகப்பெரிய பங்களிப்பு இருந்ததாக கருதப்படுகின்றது.அந்த வகையில் தற்போதைய  நாட்டின் நிலைமையை எவ்வாறு  பார்க்கின்றீர்கள்?

பதில் : 2005ஆம் ஆண்டு  மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக வந்ததும் யுத்தமே  பாரிய சவாலாக இருந்தது. அது மஹிந்த ராஜபக் ஷ உருவாக்கியதல்ல.  அது மஹிந்தவுக்கு கிடைத்தது.   நாடு முன்னேறுவதில்  காணப்பட்ட   மிகப்பெரிய தடையாகவே  பயங்கரவாதம் காணப்பட்டது.மக்கள் அச்சத்துடன்  வாழ்ந்தனர்.எனவே இந்த நிலைமையானது அன்று  மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாரிய சவாலாக காணப்பட்டது.எனவே இந்த நிலைமையை முடிக்கவேண்டும் என்று நாம் கருதினோம்.அந்த சந்தர்ப்பத்திலும் கூட நாம் வரலாற்றிலிருந்து பல பாடங்களை படித்திருந்தோம்.சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த  அனுபவமும் எமக்கு இருக்கிறது.

யுத்த நடவடிக்கைகள்   பின்னடைவை சந்தித்த  அனுபவமும் எமக்கு இருந்தது.   எனவே யுத்தத்தை  முடிக்கவேண்டிய தேவை மஹிந்தவுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர் முதலில் அந்தத் தெரிவை செய்யவில்லை. கடந்தகாலத்தில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டும்  கூட முதலில் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை முடிக்க எத்தனித்தார்.   நான் பேச்சுவார்த்தைக்கு தயார்  பேச வாருங்கள் என்று  மஹிந்த ராஜபக் ஷ பகிரங்கமாகவே கூறினார்.ஆனால் ஜெனிவாவில் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையே  தோல்வியில் முடிவடைந்தது.ஆனால் அப்போது கூட  பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம்   பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை.

கேள்வி : பிரபாகரனுக்கு பேச்சுவார் த்தை மூலம்  பிரச்சினையை தீர்க்கும் எண்ணம்  இருக்கவில்லை என்பதை உறுதியாக கூறுகின்றீர்களா?

பதில் : பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவருக்கு அதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் அவர் அதனை பயன்படுத்தவில்லை. 1987 ஆம் ஆண்டு இந்தியா தலையிட்ட  சந்தர்ப்பம் தான் சிறந்த சந்தர்ப்பம்.அன்று கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையை அதிகமான மக்கள் விரும்பவில்லை. எதிர்த்தனர். ஆனால்  அந்த முறைமை அன்று கொண்டுவரப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தையும் பிரபாகரன் வீணாக்கிவிட்டார்.   அந்த சந்தர்ப்பத்தை அன்று அவர் நன்றாக பயன்படுத்தியிருந்தால் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.

பின்னர்   நோர்வேயின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையும் தோல்வியடைந்தது.அவ்வாறான  அனுபவங்கள்  இருந்தும் மஹிந்த ராஜபக் ஷ பேச்சுவார்த்தைக்கு  சென்றார்.ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.  எனினும் அதன் பின்னரும் மாவிலாறு விவகாரம் வரை நாங்கள்  பொறுமையுடனேயே இருந்தோம்.  அதுவரை இராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.மாவிலாறு பிரச்சினை வந்தபோது நாம்  நெருக்கடியான கட்டத்திற்கு வந்துவிட்டதை  உணர்ந்தோம்.   அதன் பின்னர்  இந்த யுத்தத்தை  முடிக்கவேண்டும் என நாம் தீர்மானித்தோம். எனவே குறுகிய காலத்தில் சரியான திட்டமிடலுடன் யுத்தத்தை முடித்தோம்.

எனினும் சர்வதேச சமூகமும்  தமிழ் அரசியல்வாதிகளும்  புலம்பெயர் மக்களும்   ஒருவிடயத்தை மறந்துவிட்டனர்.  அதாவது யுத்தத்தின் பின்னர்  மஹிந்த ராஜபக் ஷ வடக்குஇ கிழக்கிற்காக  ஆற்றிய  சேவையை   அவர்கள் மறந்துவிட்டனர்.யுத்தத்தின் பின்னர்   மஹிந்த  எடுத்த வேலைத்திட்டங்களுக்கு இந்த தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவற்றை அங்கீகரிக்கவில்லைஇ பேசவுமில்லை.

கேள்வி : என்ன திட்டங்கள் அவை?

பதில் : 3 இலட்சத்துக்கும் அதிகமானோர்  அன்று நிர்க்கதி நிலையில் இருந்தனர்.   ஒரு பிரச்சினை ஏற்பட்டவுடன் முன்னுரிமை அளித்து   செய்யவேண்டிய வேலைத்திட்டங்களை அடையாளம் காணவேண்டும். அதனையே மஹிந்த அன்று  செய்தார். முதலில் எதை செய்வது?பின்னர் எதை  செய்வது என்ற திட்டம் எம்மிடமிருந்தது.  முதலில் செய்யவேண்டியதை பின்னர் செய்தால்  சிக்கல் ஏற்படும்.  யுத்தம் முடிந்த பின்னர் வந்த  ஐந்து வருடங்களில்   மஹிந்த  முக்கியமான திட்டங்களை முன்வைத்தார்.   முதலாவது விடயமாக  3 இலட்சம் மக்களை மீள் குடியேற்றவேண்டிய   தேவை இருந்தது.  அடுத்ததாக   இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களை  என்ன செய்வது  என்ற  விடயம் இருந்தது.  இவை   இரண்டுமே   முதன்மை விடயங்களாக  இருந்தன.   இந்நிலையில் 3 இலட்சம் பேரை மீள்குடியேற்றவேண்டுமானால்  நிலக்கண்ணிவெடிகளை  அகற்றவேண்டியிருந்தது.

கேள்வி : இந்த கட்டத்தில் உங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

பதில் : அதிகமான நடவடிக்கைகளை  இராணுவம் முன்னெடுத்தது.  அதன்படி நாங்கள்  எமது இராணுவத்தையும் பயன்படுத்தி  கண்ணிவெடிகளை  அகற்றினோம்.  இரண்டரை வருடங்களில்  நிலக்கண்ணி வெடிகளை அகற்றினோம்.  இலங்கை இராணுவமே  70 வீதமான கண்ணிவெடிகளை அகற்றியது.  இன்று  யுத்தக்குற்றம்  பற்றி  பேசுபவர்கள்  இராணுவத்தின் இந்த செயலைக்குறித்து  பேசுவதில்லை. அடுத்ததாக 3 இலட்சம் மக்களை    மீள்குடியேற்றினோம்.  அதன் பின்னர் மீள்குடியேற்றப்பகுதிகளில் அபிவிருத்திகளை செய்தோம். உட்கட்டமைப்பு  வசதிகளை மேற்கொண்டோம். ரயில் பாதைகளை அமைத்தோம்.   மின்சாரத்தை வழங்கினோம்.  நீர்ப்பாசனத்திட்டங்களை    அபிவிருத்திசெய்தோம்இ குடிநீர்த்திட்டத்தை மேற்கொண்டோம்.  குறுகிய ஐந்து வருடங்களிலேயே இந்தத் திட்டங்களை முன்னெடுத்தோம். அதன்பின்னர் கல்விஇ சுகாதாரம்இ  போன்றத் துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினோம்.அதன்பின்னர்  12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடயத்தில் என்ன செய்வது  என்று ஆராய்ந்தோம்.  அவர்களுக்கு  முழுமையான  புனர்வாழ்வுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்தோம்.   இதில் மஹிந்த ராஜபக் ஷ உறுதியாக இருந்தார்.

கேள்வி : அந்த இடத்தில் உங்களுக்கு  வேறுபட்ட கருத்து இருந்ததா?

பதில் : இல்லை. இல்லை.  நாம்   மஹிந்த ராஜபக் ஷ   முன்வைத்த  கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்.   முழுமையான புனர்வாழ்வு அளித்து போராளிகளை சமூகமயப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்தோம்.எமது புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் சிறந்த  வெற்றியையளித்தது.சர்வதேசத்தின்  தொடர்பும் இதில் இருந்தது.முன்னாள்  போராளிகளை சமூகமயப்படுத்தியபோது அவர்களுக்கான தொழில்வாய்ப்பு பிரச்சினை  ஏற்பட்டது. அப்போது தனியார் துறையின் முதலீடுகளை அங்கு கொண்டு சென்றோம்.அத்துடன் சிவில் பாதுகாப்பு சேவையில் முன்னாள் போராளிகளை இணைத்துக்கொண்டோம்.

யாழ்.குடாநாட்டை 1998 ஆம் ஆண்டு அரசாங்கம் மீட்டது.எனினும் அந்தப் பிரதேசம் ஒரு பங்கர் போன்றே காணப்பட்டது.  யுத்தத்தின் பின்னர்  அனைத்து இடங்களில் இருக்கின்ற இராணுவத்தினரை  முக்கியமான இடங்களைத் தவிர்த்து  குறைப்பதற்கு   தீர்மானம் எடுத்தோம்.இன்று விடுவிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் இந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  உட்பட்டவையல்ல.எமது அரசாங்கம்   அன்று எடுத்த முடிவு.  தெல்லிப்பழை கீரிமலை காங்கேசன்துறை உள்ளிட்ட  இடங்களை நாங்கள் விடுவித்தோம்.பலாலிப் பகுதியை மட்டுமே எம்மால் விடுவிக்க முடியாமல் இருந்தது.  அது  தொடர்பிலும்  ஒரு  திட்டம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.கொழும்பிலிருந்த பல்வேறு மக்களின் வீடுகள் யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அர்ஜுன மகேந்திரனின் தந்தையும் தனது யாழ்ப்பாணத்திலிருந்த வீட்டை  என்னிடம் வந்து கேட்டு விடுவித்துக்கொண்டார்.கொழும்பு முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் பாரியாரும்   யாழில் உள்ள அவரது இல்லத்தைப் பெற்றுக்கொண்டார்.இப்படித்தான் நாம் சேவையாற்றினோம்.

2015ஆம் ஆண்டு எமக்கு அதிகாரம் கிடைத்திருந்தால் நாம் அடுத்த பிரச்சினைகளையும் தீர்த்திருப்போம்.ஒரு கட்டத்தில்  தீர்வுத் திட்டமாகவே இந்த நாட்டில் மாகாண சபை முறைமை வந்தது.  தெற்கின் அனைத்துப்பகுதிகளிலும் மாகாண சபை உருவாக்கப்பட்டது.கிழக்கில் நாம் உருவாக்கினோம்.வடக்கில் மாகாண சபை இருக்கவில்லை.வடக்கில்  முதன்முதலில் மாகாண சபையை யார் அமைத்தது?   மஹிந்த ராஜபக் ஷவே அதனை ஸ்தாபித்தார்.  அன்று  வடக்கு தேர்தலை நடத்தும்போது அதில் நாம் தோல்வியடைவோம் என  எமக்குத் தெரியும். அமைச்சரவையில் பலர் அதனை  எதிர்த்ததாக  தகவல் இருக்கிறது. ஆனால்  மஹிந்த ராஜபக் ஷ வடமாகாண சபையை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.வடக்கு தேர்தலை நடத்தும் முன்னர் அதனை சுதந்திரமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.  அதாவது  இராணுவம் மற்றும் பொலிஸாரை  தவிர வேறு யாரிடமும்  ஆயுதம் இருக்கக்கூடாது என மஹிந்த ராஜபக் ஷ என்னிடம் கூறினார்.அதன்படி பல்வேறு குழுக்களிடமிருந்து நாங்கள் ஆயுதங்களை களைந்தோம்.ஆனால் அவை தொடர்பில் சர்வதேசமோ தமிழ் அரசியல்வாதிகளோ பேசுவதில்லை.அவ்வாறு  நாம் செய்திருக்காவிட்டால் கடந்த ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குகள் கிடைத்திருக்குமா?வடமாகாண சபை எம்முடன் இணைந்து செயற்படும் என்று  நாம் அன்று எதிர்பார்த்தோம்.  ஆனால் அது நடக்கவில்லை.எமக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.வடக்கில்  அதிகளவு  இராணுவம் இருப்பதால்  அங்கு இடம்பெறவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அப்போதிருந்த இந்தியத் தூதுவர் என்னிடம் கேட்டார்.நான் சரியென்று கூறினேன்.  அதன்படி இந்தியத் தூதுவரின் இல்லத்தில்  இரண்டு மணிநேரம்  சம்பந்தனுடன் பேச்சு நடத்தினேன்.

கேள்வி : எப்போது இது நடந்தது?

பதில் : வடமாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் இது நடந்தது.

கேள்வி : அதன்போது சம்பந்தன் என்ன கூறினார்?

பதில் : நாம் எவ்வாறு  வடக்கை கட்டியெழுப்ப  உதவி செய்ய முடியும் என சம்பந்தனிடம் கேட்டேன்.எனினும் அந்த சந்திப்பின் ஊடாக  எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.   அதன்பின்னர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்திக்கவேண்டும் என விக்கினேஸ்வரனை நான் கேட்டேன்.இராணுவம் தொடர்பான  சிக்கல்களுக்கு தீர்வு காணவே  அவருடன் பேச்சுவார்த்தை நடத்த கேட்டேன்.அந்தப் பேச்சுவார்த்தைக்கு வடக்கு முதல்வர் இணங்கினார். திகதியும்  இடமும்இ நேரமும் ஒதுக்கப்பட்டன.எனினும்  அவரை சந்திப்பதற்கு  அரைமணி நேரத்திற்கு முன்னர் விக்கினேஸ்வரன் முடியாது என்று கூறிவிட்டார்.கூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் அதனை மறுத்தார்.

கேள்வி : இவைபற்றி அந்தநேரம் ஏன் வெளிப்படுத்தவில்லை?

பதில் : சில இடங்களில் கூறினேன்.  ஆனால் இவற்றைக்  கூறித்திரிவதில் அர்த்தமில்லை என எண்ணினேன்.எப்படியும் நாங்கள்  முன்னுரிமை அளித்து மேற்குறித்த வேலைத்திட்டங்களை  செய்யாமல் தீர்வு குறித்து  பேசியிருந்தால் இரண்டுமே நடந்திருக்காது.அதுதொடர்பில்  நான்  நேர்மையான முறையில் மகிழ்ச்சியடைகின்றேன்.    வடக்குஇ கிழக்கில் மட்டுமின்றி 100அடிக்கு  இடையில்   சோதனைச்சாவடிகள் காணப்பட்டன.வீதித்தடைகள்  இருந்தன.2015ஆம் ஆண்டு நாம் நாட்டை பொறுப்பு கொடுக்கும்போது ஒரு சோதனைச்சாவடியும் இருக்கவில்லை.

விஜயகலா பாலியல் வல்லுறவுகள்  இடம்பெறுவதாகவும் போதைப்பொருள் கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார்.  எமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான எந்த சிக்கலும் இருக்கவில்லை.  யுத்தம் முடிந்த பின்னர் கடந்து சென்ற ஐந்து வருடங்கள் தொடர்பில் விஜயகலா பேசவில்லை. அவர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியை பேசுகின்றார்.  நாம் சட்டம்இ ஒழுங்கை நிலைநாட்டினோம்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com