தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கைது.!

அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006-ம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலின்போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடைக்கு வந்து தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பான தகவலை அவரது வக்கீல் மைக்கேல் அவினாட்டி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்” என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் ஸ்டார்மி டேனியல்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்து இருப்பது நினைவுகூரத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com