தமிழ் සිංහල English
Breaking News

சத்தியம்தான் வெல்லும்!”

எழுதுவது: மாதிஹுர் றஸூல் காதிரி,ரிபாஈ
.
தொடர்-1
.
“ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக்கடிக்க வந்த கதை போல…” உலமாஉகளுக்குள் மூட்டடி சாட்டடி பண்ணிவந்த மெளலவி பதுர்டின் சறுக்கி பறலேவி என்பவர் இப்போது ஷெய்ஹுமார் அவ்லியாக்கள் பற்றியும் தவறான எண்ணத்தை நிலை நாட்டுவதற்கு தன் வேலையைக்காட்ட அடுத்த ரவுண்ட் கிளம்பியிருக்கிறார்.

இம்மனிதர் அண்மையில் எழுதிய “சத்தியம் வெல்லும்!” என்ற பதிவு இவரின் அசலிய்யத்தை மேலும் காட்டிக்கொடுத்துவிட்டது.

இவருக்கு மறுப்பு எழுதுவதனால் எந்த நன்மையும் ஆகிவிடப்போவதில்லை என்றாலும் இந்தியா இலங்கயிலுள்ள விடயம்- விபரம் அறியாத அப்பாவிகள் இவரின் சூட்சுமக்கயிற்றை விழுங்கி வழிதவறக்கூடாது என்பதற்காகவே ஒரு சில முக்கியமான விடயங்களை இக்கட்டுரை பேசுகிறது.
***********

1. பதுறுத்தின் சறுக்கி பறலேவி தனது பதிவில் ஸாஹிபுல் கராமாத் அஸ்ஸெய்யித் அப்துர் றஸீத் காதிரீ வர் ரிபாஈ தங்கள் வாப்பாவை குறைகாண்கிறார். ஒரு ஷெய்ஹுல் காமிலையே குறைகாண்கிறார். இவருக்கு வஹ்ஹாபிகளுடைய புத்தியே இருக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த சாட்சி.

ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோன்று குத்புஸ்ஸமான், கண்கள் கண்ட காமில் வலீ அஷ்ஷெய்யித் அப்துர் றஸீத் கோயாத்தங்கள் மெளலானா வாப்பா அவர்களை சிறுமைப்படுத்தி குற்றம்கண்டு மெளலவி பதுர்டின் ஸறுக்கி “சத்தியம் வெல்லும்” என்ற கட்டுரையில் எழுதியதே பெரும் நிரூபணம், சறுக்கியார் ஓர் அசத்தியவாதி என்பதற்கும் அவர் கருத்துக்கள் அசத்தியமானவை என்பதற்கும் அவர் ஒரு போலி சேஹு என்பதற்கும்.
தங்கள் வாப்பாவை குறை சொல்பவன் நிச்சயம் றஸூலுல்லாஹ்வையே குறை சொல்லும் அபூஜஹ்லேதான் சகோதரர்களே!

அஷ்ஷெய்யிதுஷ்ஷெய்ஹ் அப்துர்றஸீத் தங்கள்வாப்பா அவர்கள் சிறு பாலகனாயிருக்கும்போதே வஹ்பீயான விலாயத்தைப்பெற்ற கவ்னிய்யத்தான கராமாத்துக்களை காட்டிய ஒரு வலிய்யுல் காமில்! மடைதிறந்த வெள்ளம் போன்ற கஷ்பையுடையவர்கள். கல்லூரிகள் மத்ரஸாக்கள் செல்லாமலேயே கிதாபுகள் எழுத வாசிக்கக்கூடிய ஒரு மகான். ஒன்றா இரண்டா அவர்களின் கராமத்துக்களை உலகே அறியும். ஆனால் அப்படிப்பட்ட இந்த மகானை இந்த அற்ப சறுக்கி சிறுமைப்படுத்தி கிறுக்குத்தனமாக கிறுக்கியுள்ளார்.

மெளலவி மிஸ்பாஹி பேசும் அதே கருத்துக்களைக்கொண்ட பைத்களை தங்கள் வாப்பாவின் பாட்டன்மார்களான ஷெய்ஹுமார்கள் பாடியவாறே ரிபாயிய்யா ராத்திபில் தங்கள் வாப்பாவும் பாடுவார்கள். சறுக்கி இதனை கேள்வியுற்றால் ஒட்டுமொத்த செய்யிது வம்சமுமே ஷிர்க்கில் இருந்தனர் என்று சொன்னாலும் சொல்லுவார். ஆச்சர்யமில்லை! அந்தளவுதூரம் அவருடைய செருக்குப் புத்தியில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார்.

2. மெளலவி மிஸ்பாஹி அவர்கள் விஷக்கல் வைப்பதாக நோட்டிஸ் அடித்தார்! என தவறாக சொல்கிறார் சறுக்கி.

ஏனெனில், தங்கள் வாப்பா அவர்கள் நடுவதற்கு கல்லை கையிலெடுத்த கடைசி நேரத்தில்தான்

“இங்கு உள்ளவங்க மிக விஷேசமானவங்க. அதனால இதை விஷக்கல்லாக வைப்போமா மகன்!” என்று கேட்டு….

“உங்கட விருப்பம் படியே செய்ங்க வாப்பா!”

என்று சொன்னதும் “யா ரிபாஈ!” என்று ரிபாய் நாயகத்தை அழைத்து கல் நட்டினார்கள். அதற்கு முன்னர் மீஸான் கல்லை விசக்கல்லாக வைப்பது என்ற நிகழ்ச்சி நிரல் யாருக்குமே இருந்திருக்கவில்லை. கடைசிநேரத்தில் தான் இந்த அற்புத்த்தை தங்கள் வாப்பா நிகழ்த்திக்காட்டினார்கள். அட்டாளைச்சேனை அழையா விருந்தாளிக்கு இது எங்கே தெரியப்போகின்றது?

1978ம் ஆண்டு பெரிய ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 40ம் நாள் கத்முல் குரான் வைபவம் வெகு விமரிசையாக பத்ரிய்யஹ் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு ஊர் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு நோட்டிஸ் அடித்து விநியோகிக்கப்பட்டது. ஷெய்ஹுனா ஸூபி நாயகம் அவர்களுக்கும் அழைப்பிதல் அனுப்பி அவர்களும் வந்து கலந்துகொள்வதாக அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அதன்படி மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காத்தான்குடி வந்து ஜெய்லாப்தீன் வீட்டில் தங்கியிருந்தார்கள் அவர்கள்.

ஏற்கனவே ஸூபி ஷெய்ஹுனாவுக்கு கப்ர் ஸியாரத்தை முன்னிலைப்படுத்துவதில் அவ்வளவு நாட்டம் குறைவு.

அதேவேளை செக்குக்கு காசு மாற்றி 10%கொமிஷன் எடுக்கும் வியாபாரம் செய்துவந்த ஜெய்லாப்தீனுக்கு மெளலவி மிஸ்பாஹியை பிடிக்காது.

இச்சந்தர்பத்தில் பெரிய ஆலிம் அவர்களுக்கு தலை கால் மாட்டில் பெயர் பொறித்த மீஸான் கல்லை நாட்ட ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற விடயத்தை சற்று காரமாக காதில் போட்டுவைத்தார்கள் ஸைலாப்தீனும் அவர் குழுவும். அதனால் குறித்த நேரத்துக்கு ஸூபி ஷெய்ஹுனா பத்ரிய்யஹ் பள்ளிவாயலுக்கு வரவில்லை. மக்களும் மெளலவீ மிஸ்பாஹி அவர்களும் வெகு நேரம் காத்திருந்து ஏமாந்தார்கள்.

கடைசியில் ஷெய்ஹுனா அவர்கள் வரமாட்டார்களாம் என்ற செய்தி கேள்வியுற்று மெளலவீ மிஸ்பாஹீ அவர்கள் மிக்க மனவேதனைகொண்டார்கள். அந்நேரத்தில், மெளலவி அவர்களுக்கு சொல்லப்படுகின்றது, இப்பொழுத்துதான் மெளலானா வாப்பா அவர்கள் இந்தியாவிலிருந்து தைக்காவுக்கு வந்துசேர்ந்துள்ளார்கள். ஒருவேளை நீங்கள் நேரில் சென்று கூப்பிட்டால் வரக்கூடும் என்பதாக.

உடனே தனது துவிச்சக்கரவண்டியில் தைக்காவை நோக்கி மிதிக்கிறார்கள் மிஸ்பாஹீ. அங்கு செல்கையில் தங்கள் வாப்பா அப்போதுதான் அங்கு வந்திறங்கி தமது மேலாடையைக் கழட்டியவர்களாக நிற்கின்றார்கள்.

(தங்கள் வாப்பா கேட்கிறார்கள்) என்ன மகன் அவசரமாக வாறீங்க!
வாப்பாட கத்முல் குர்ஆன் வைபவம் ஏற்பாடுசெய்த. நீங்கதான் வரணும் வாப்பா! என்றார்கள். வேறு எந்த விபரமும் மெளலவீ அவர்கள் சொல்லவில்லை. நிலமையை அறிந்துவிட்டவர்கள் போன்று
உடனே கழட்டிய மேலாடையை அணிந்தவர்களாக நூர்முஹம்மது ஹாஜியாரை அழைத்து காரை கொண்டுவரச்சொல்லி அதில் பத்ரிய்யஹ் பள்ளிவாயல் வந்தடைந்து கத்முல் குர்ஆன் வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.

அதன் பின்னர்தான் எல்லோரும் எதிர்பாராத விதமாக மீஸான் கல்லை விஷக்கல்லாக நட்டி கராமத் ஒன்றைக்காட்டிவிட்டுச்சென்றார்கள். இன்றும் மக்கள் அக்கல் மூலம் விஷம் வாதம் அனைத்துக்கும் குணம் பெறுவது ஓரு வாழும் அற்புதமே.

ஸியாரத்தின் தலமாட்டில்தான் தங்கள் வாப்பா கல் நட்டினார்கள். அதன் அதீத சக்தியால் பிற்காலத்தில் கால்மாட்டில் வைக்கப்பட்ட மீஸான் கல்லும் விஷம் பிடிக்கத்தொடங்கிவிட்டது. இது யாராலும் மறுக்க முடியாத ஓர் நிதர்சனமான உண்மையே.

இந்நிகழ்வில் அழைக்கப்பட்டிராத அட்டாளைச்சேனையில் அப்போது சின்னப்பயலாக இருந்த ஸறுக்கிக்கு இதெல்லாம் தெரியாது.

அவர் ஒரு ஊகத்தின்படியே எல்லாவற்றையும் எழுதத்துணிந்துள்ளார் என்பதை இது காட்டுகிறது. மகான்களின் அகமியம் பெருமைக்கப்பலிற்கு எங்கே தெரியப்போகின்றது.

3. ஒருவேளை ஸறுக்கி எழுதுவதுதான் உண்மையென்றால், அபுல் இர்பான் பெரிய ஆலிம் வலீ, தங்கள் மெளலானா வாப்பா ஆகியோரின் விலாயத்தை ஸூபி ஹஸ்ரத் நாயகம் புரியவில்லை என்று சொல்வது போலாகிவிடும்.

உண்மையை அறிந்த மக்களுக்கு இதனைத்தான் உணர்த்த வருகிறாரா குழப்பவாதி பர்க்கி.
ஸூபி ஹஸ்ரத் நாயகத்தைப்பொறுத்தவரை அவர்களும் வெள்ளி ஆலிம் வலி அவர்களும் ஹைதராபாத் குத்புஸ்ஸமானின் ஆன்மீகப்பார்வையால் தெரிவுசெய்யப்பட்ட விசேஷமானவர்கள். ஒவ்வொரு வலிமார்களும் வெவ்வேறு போக்கையுடையவர்கள். ஒருவரை வைத்து மற்றவரை மதிப்பிடுவது முட்டாள்தனம். ஆனால் அவ்வாறு மதிப்புடுகிறார் இந்த சறுக்கியார்.

4. வலிமார்கள் தமக்கிடையே ஆத்மீக தொடர்பை பேணுபவர்கள். தம் கஷ்பு கொண்டு மனிதர்களின் ஆன்மீக அந்தஸ்தைக் காணவல்லவர்கள். அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலியவர்களைப்பொறுத்த வரையில் அவர்கள் அப்தால் வரிசையைச்சேர்ந்தவர்கள் என்பது கம்பம் அம்பா நாயகத்தின் வாக்கு. மரணத்தறுவாயில்தாப் பெரிய ஆலிம் அவர்கள் ஒரு வலியுல்லாஹ்வாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஊர் மக்கள் கறாமத்கள் மூலம் கண்டுகொண்டனர்.

அதே வேளை அப்துர்றஸீத் தங்கள் வாப்பாவின் அந்தஸ்தை விபரிக்க வார்த்தைகளே கிடையாது. அவர்களின் காராமத்துக்களை விபரிக்கும் பெரும் புத்தகமே தொகுக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பெரிய ஆலிம் அவர்களை சுகவீனம் பார்க்க வந்து சந்தித்துச்சென்றார்கள் தங்கள் வாப்பா!

அங்கிருந்த எம்மிடம் பெரிய ஆலிம் வலியவர்கள், “தைக்கா மெளலானா பெரிய ஆள்தான்! அவர் வந்ததனால் எனக்கு தொந்தரவு செய்துகொண்டிருந்த ஷெய்த்தான் ஓடிவிட்டான்” என்று சொன்னார்கள்.

அதேபோன்று தங்கள் வாப்பாவும் “இவங்க ரொம்ப ரொம்ப விசேசமானவங்க!” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மகான்கள் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் ஸூபி ஹஸ்ரத் நாயகம் அவர்கள் விரும்பவில்லை என்று சொன்னால் அவர்களின் ஆன்மீக அந்தஸ்து கேள்விக்குறியாக்கியதாகிவிடும். இதைத்தான் பதுர்தீன் சறுக்கி செய்ய முனைகிறார். ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களே! வலிமார் நேசர்களே! இதுகாலவரை உலமாக்களுக்குள்ளேதான் சறுக்கி குழப்படியை உண்டுபண்ணி நாரத வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது வலிமார்கள் பற்றியும் மக்களுக்கிடையே குழப்படி விளையாட்டை காட்ட முனைகிறார்!

5. மெளலவி மிஸ்பாஹி அவர்கள் வஹ்ததுல் வுஜூதை பேசிய ஊரில் சலசலப்பு ஏற்பட்டபோது, “மகன் இங்கு வருவதால் ஒரு சல்லிக்காசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஹக்குக்கு மாற்றமாக ஒருபோதும் பேசமாட்டேன்” என்ற தங்கள்வாப்பாவின் வார்த்தைகள் வெகு பிரபலம்.
மெளலவி மிஸ்பாஹியை ஆதரித்ததால் காத்தான்குடியைவிட்டு ஹிஜ்ரத் செல்கையில் தங்கள் வாப்பாவின் கரத்தை முத்தமிடும் சாக்கில் கடித்த கயவனின் முடிவு என்னானது என்று ஊரே சாட்சி.
வலிமார்களைக் குறைகாண்பவனோடு அல்லாஹ் போருக்குதயாராகிறான்.
தங்கள் வாப்பாவ குறைகாணும் இந்த சறுக்கியோடும்தான் என்பது நிச்சயம் .

சில லூசுகள் தங்கள் வாப்பா ஒர் அப்பாவி! ஏமாற்றப்பட்டார்கள்! என்று சொல்வதுபோன்றிருக்கிறது சறுக்கியின் கிறுக்கல். ஒரு ஷெய்ஹு, காமில் வலி என்றால் எங்கணம் ஏமாறுவார்கள்! அதேபோன்று ஸூபி ஹஸ்ரத் அவர்கள் மெளலவியின் கடிதங்களால் எவ்வாறு ஏமாறுவார்கள் சிருக்கர்களே!
.
6. ஸூபி ஹஸ்ரத் அவர்கள் இலங்கை- காத்தான்குடிக்கு வருவதற்கு முன்னரே தங்கள் வாப்பா அவர்கள் 12 வயதில் தம் மாமா யூஸுப் வலியுல்லாஹ்வால் அந்தரத்தீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களின் ஷெய்ஹுமார் வருகையின் பாரம்பரியம் 400 வருடங்களுக்கு மேற்பட்டது.

எனவே ஸூபி ஹஸ்ரத் அவர்கள் அறிமுகத்துக்கு முன்னதாகவே மெளலவி மிஸ்பாஹிக்கு தங்கள் வாப்பாவுடன் நட்பும் அன்பும் மரியாதையும் இருந்துவந்தது.

இளம் வயதில் தங்கள் வாப்பாவுடன் கடற்கரை சென்று அவர்களுடன் ஓட்டப்பந்தயம், தூரப்பாய்ச்சல்(long Jump) போன்ற விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடும் ஞானக்கவிகளை கேட்டு மெய்மறந்திருக்கிறார்கள். ஞானக்கல்வியை நபி பேரர் தங்கள்வாப்பாவின் அருட்பார்வையாலும் மெளலவீ அவர்கள் பெற்றுவந்தார்கள்.

“ஸூபி ஹஸ்ரத் நாயகம் அவர்களிடம் கிலாபத் பெற்ற பின்னர் மெளலானா வாப்பாவுடன் மெளலவி நெருக்கமாக பழகினார்” என்பது அட்டாளைச்சேனையில் குருவிபிடித்தும் குண்டுவிளையாடியும் திரிந்த காமாலை நோய்க்கண்ணன் சறுக்கியின் பிழையான மஞ்சள் கலர் பார்வையாகும். அவரின் சிறுபிள்ளை வாதம் சிரிப்பை மூட்டுகிறது.

ஒருஷெய்ஹுவிடம் பைஅத் கிலாபத் பெற்றபின்னர் இன்னொரு ஷெய்யிது-நபி பேரரிடம் தமக்கிருந்த தொடர்பை மெளலவி தொடர்ந்து பேணியது ஸுபி ஹஸ்ரத் நாயகத்துக்கு பிடிக்கவில்லை என்று சறுக்கி சொல்கின்றார். இங்கு ஸூபி நாயகத்தையே தரம் தாழ்த்தவருகின்றார் இந்த செருக்கி சறுக்கி.

விடயம் அறிந்த ஒருவர் இந்த கிறுக்கலை வாசித்தால் நிச்சயம் சொல்வார், சூபி ஹஸ்ரத் செய்ஹுனாவையே தரம் தாழ்த்துகிறான் இந்த துப்ருத்தின் என்பதை.
.
7. மெளலவி மிஸ்பாஹி அவர்கள் மதீனா செல்லும் விஷயத்தில் சூபி ஹஸ்ரத் நாயகம் அவர்கள் கஷ்பு மூலம் எல்லாவற்றையும் அறிந்து தடுத்தார்கள் என்கிறார் சறுக்கி.
சரீ!! அப்படியென்றால் அதே கஷ்பு மூலம் அறிந்து ஏன் கிலாபத்தையும் கொடுக்காமல் விட்டிருக்கலாம்தானே!
அவ்வாறு கொடுக்காமல் விட்டிருந்தால் சறுக்கி சாட்டும் குற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருக்காதுதானே!

சறுக்கி குறிப்பிடும் வழிகேடு வளர்ந்திருக்காதுதானே!
அதை ஏன் செய்யாமல் விட்டார்கள் ஸூபி நாயகம்.

கஷ்பு மூலம் காணாமல் கிலாபத் கொடுத்ததுதான் ஸுபி நாயகம் செய்த தப்பு என்றல்லவா சறுக்கியின் உளரல் புரியவைக்கிறது!
அல்லது சூபி நாயகத்துக்கு கஷ்பு இருக்கவில்லை என்ற முடிவுக்கு வரவைக்கப்பார்க்கிறாரா இந்த சறுக்கி.

சறுக்கிக்கு இயற்கையிலேயே கல்பு சரியில்லை. காமாலைக் கண்ணன். அதனால்தான் எல்லாவற்றையும் தன்னுடைய தவறான கண்ணோட்டத்தில் தவறாகப் பார்த்து தான் தவறாக புரிந்துகொண்டதை எழுதியிருப்பது இப்பதிவில் புரிகிறது.
.
8. சறுக்கி இப்போது ஷெய்ஹு வேசம் போட்டு வந்திருக்கிறார். அதனால்தான் ஏனைய ஷெய்ஹுமார்களை தாழ்வுபடுத்தினால்தான் தான் பெரிய சத்தியக்கடல்- ஷெய்ஹு குல்லி என்று பெயர்போடலாம் என்று கணக்குப்போடுகிறார் காக்கா!
.
9. வஹ்ததுல் வுஜூதை மெளலவி அப்துர் றஊப் அவர்கள் பேசிய பின்னர்தான் இதுபற்றி நாட்டுக்கே தெரியும் என்று சறுக்கி எழுதுகிறார். அப்படியென்றால், சூபி ஹஸ்ரத் அவர்களிடமிருந்து இந்த சறுக்கி கூட வஹ்ததுல்வுஜூதை கேள்விப்பட்டேயிருக்கவில்லை அல்லது ஷெய்ஹுமார் என்று வந்தவர்கள் பேச, மக்கள் ஒருவரும் இதனை கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்ல வருகிறாரா சறுக்கி?

அந்த கால கட்டத்தில் சறுக்கி 25 வயதிற்குற்பட்ட பக்குவம் அறியாத பையன். வஹ்ததுல்வுஜுத் என்ற சொல்லே அப்போதுதான் கேள்வியுற்றிருக்கிறார். அப்படியென்றால் வலிமார்களின் நடவடிக்கைகளின் அகமியம் எங்கணம் புரிந்துகொண்டிருப்பார் இவர்!
.
10. தலைமுறை தலைமுறையாக இலங்கை வரக்கூடியவர்களும் தங்களுடைய பரம்பரைச்சொத்துகளையே மார்க்கப்பணிக்காக அர்ப்பணித்து தரீக்காவையும் முரீதுகளைதும் உயிர்பித்தவர்களுமான தியாகச்செம்மல் செய்யித் அப்துர்றஸீத் தங்கள் நாயகம் அவர்களுக்கு மெளலவி மிஸ்பாஹி அவர்களை வைத்து தன் மகத்துவம் மிக்க காதிரிய்யா ரிபாஇய்யஹ் தரீக்காவுக்கு கூட்டம் சேர்க்கணும் என்ற தேவை அணுவளவும் இல்லை. அப்படியொரு தேவை இருந்ததாக குறிப்பிடும் இந்த சறுக்கியின் மனக்கசடையே இது காட்டித்தருகின்றது.

சறுக்கிக்குத்தான் அப்படிப்பட்ட கீழான நோக்கம் உண்டே தவிர மெளலானா வாப்பாவுக்கல்ல. பால் முகத் தங்கள் நாயகத்தின் பெயரை நினைக்கக்கூட இந்த சாக்கடை சறுக்கிக்கு தகுதியில்லை.

மெளலவி மிஸ்பாஹி பேசும் அதே கருத்துக்களைக்கொண்ட பைத்களை தங்கள் வாப்பாவின் பாட்டன்மார்களான ஷெய்ஹுமார்கள் பாடியவாறே ரிபாயிய்யா ராத்திபில் தங்கள் வாப்பாவும் பாடுவார்கள். சறுக்கி இதனையெல்லாம் காதால் கேள்வியுற்றால் ஒட்டுமொத்த செய்யிது வம்சமுமே ஷிர்க்கில் இருந்தனர் என்று சொன்னாலும் சொல்லுவார். ஆச்சர்யமில்லை!
.

11. மெளலவீ அப்துர் றஊப் அவர்கள் வஹ்ததுல்வுஜுதுக்கு பிழையான விளக்கம் கொடுப்பதாக இந்த சறுக்கி சொல்கிறார்.

சரிடாப்பா…சறுக்கி! சரியான வஹ்ததுல் வுஜூத் இதுதான் என்று ஸூபிய்யாக்கள் சொன்னதை ஆதாரபூர்வமாக முன்வைத்து சொல்ல உமக்கு வக்கில்லாமல் இருக்கிறதே ஏன்!
மெளலவீ மிஸ்பாஹி, தான் சொல்லும் விளக்கத்திற்கு ஸுபிய்யாக்களின் பேச்சிலிருந்து தெளிவான நிறைய ஆதாரங்கள் முன்வைத்துப்பேசுகிறாரே! ஆனால் உம்மாம் முடியாமலுள்ளதே ஏன்!

வஹ்த்துல் வுஜூதுக்கு எப்படி நீர் சறுக்கிய விளக்கத்தை விளங்கினீரோ அதைத்தானே கிறுக்கி வருகிறீர்.

சறுக்கி தன்பாட்டுக்கு இப்படியே கிறுக்காமல் இனியாவது கிதாபுகளை புரட்டி அவர் பேசுவதற்கு ஆதாரத்தையும் மெளலவீ பேசுவது பிழை என்பதற்கு ஆதாரத்தையும் முன்வைக்கவேண்டும்.!
.

12. பதுர்தின் செருக்கி, தனது பத்திரிகை சேல் ஆகுவதற்கு மெளலவி மிஸ்பாஹியுடன் தொடர்பைப் பேணித்தான் வந்தார். எதுவரை? வஹ்ததுல் வுஜூதுக்கு தனது பத்திரிகையில் தவறான விளக்கம் எழுதியதை மெளலவீ மிஸ்பாஹி நேரில் அழைத்து கண்டித்தார்களே! அதுவரை.

எதுவரை? சறுக்கி சேஹுவேசம் போட்டாரே அது வரை.
.
15. சகோதரர்களே! ஒன்றைக்கவனித்தீர்களா! ஷெய்ஹு முரீது சம்மந்தமாக பெரியார்கள் குறிப்பிட்டுள்ளதை ஆதாரம் காட்டும் சறுக்கி வஹ்ததுல் வுஜூதுக்கு தான் சொல்லும் விளக்கத்தையோ, தன்ஷீஹ் தஷ்பீஹ் பற்றியோ ஸூபிய்யாக்களின் ஒரு கருத்தையேனும் முன்வைக்கவில்லை ஏன்!

இமாம் கஸ்ஸாலீ, முஹ்யித்தீன் அறபி நாயகம், அப்துல் கரீம் ஜீலி நாயகம், ஷஃறானி இமாம், இப்னு சப்ஈன் நாயகம், ஷாதுலி இமாம் போன்ற மகான்களின் கருத்துக்களிகிருந்து மெளலவி மிஸ்பாஹியை மறுத்து சறுக்கி ஆதாரம் காட்டுவாரா! அவருடைய சகாக்களாவது கொஞ்சம் அவரிடம் இதை எடுத்துச்சொல்லுங்களேன்! ப்ளீஸ்
(தொடரும்…..)

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com