தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் அரசியல்வாதிகள் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது!

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம்.

எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர்.

இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும்.

இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாமல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும்.

எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி – எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் பற்றி மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.

அதிலும் கொழும்பை மையப்படுத்தி அரசியல் நடத்துபவர்கள் தொடர்பில் எங்கள் மக்கள் மிகத் தெளிவோடு இருக்கின்றனர் என்பதால்,

எங்கள் மக்களின் தீர்ப்பு இம்மியும் பிசகாமல் தக்க பாடம் புகட்டுவதாக இருக்கும் என்பது நிறுதிட்டமான உண்மை.

இவ்வாறு தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக வும் விழிப்பாகவும் இருப்பதால், அடுத்துவரும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இதன்காரணமாக இத்தகையவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இத்தகைய பிரசாரங்கள் உச்சமடைவதைப் பார்க்கும்போது, கடும் பயம் பிடித்துக் கொண்டு விட்டது என்பதை மட்டும் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.

எது எவ்வாறாக இருப்பினும் தேர்தல் என்று வருகின்றபோது மக்களைத் தேடிச் செல்கின்ற கட்டாயம் தேர்தலை எதிர்கொள்ளும் அத்தனை பேருக்கும் ஏற்படும்.

அவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மக்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்பர் என்பதும் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதவர்கள் அந்த இடங்களை விட்டுப் பதறி அடித்து ஓடுவர் என்பதும் நிதர்சனமான உண்மைகள்.

ஆக, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரும் படிப்பினையைக் கொடுக்கப் போகிறது.

இந்தப் படிப்பினை தமிழ் மக்களின் விடிய லுக்கு – விடுதலைக்கு நிச்சயம் வலுச்சேர்க்கும்.

ஆகையால் யார்தான் எதைக் கூறினாலும் தமிழ் மக்களின் தீர்ப்பு என்பது மேன்முறையீடு செய்ய முடியாத தீர்ப்பாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை

-எழுத்தாளர் Tamilini-

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com