தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா காட்டமான அறிக்கை.!

அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பின்னரே வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கிகொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பாம்பியோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடகொரியா, ஜப்பான், மற்றும் வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உத்தியோகபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில், அணு ஆயுதங்களை மிக வேகமாக அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தது.

ஆனால், வேகமாக அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதனால், வடகொரிய பயணத்தின் போது கிம் ஜாங் உன்னை சந்திக்காத பாம்பியோ, வடகொரிய உயர் அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

அத்துடன் வடகொரியா பயணத்தை முடித்துகொண்டு, பாம்பியோ நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார்.

அங்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளியுறவு மந்திரிகள் உடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பின்னரே பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்னார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com