தமிழ் සිංහල English
Breaking News

நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது. .!

எளிதில் கிடைக்கக் கூடிய எவ்வளோவோ மருத்துவ குணமுள்ள தாவரங்களையும் மூலிகைகளையும் நாம் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை.

கொஞ்சம் உடல்நிலை சரியாக இல்லை என்றாலும் உடனே தேடி ஓடுவது ஆங்கில மருத்துவத்தையும் மருந்துகளையும் தான்.

 நமது முன்னோர்கள் கண்டு சொன்னதும், உடலுக்கு எவ்வித பக்கவிளைவுகள் அற்றதும், ஏற்படும் நோய்களிலிருந்து நிரந்தரமாக விடுபடவும் ஆயுர்வேத சிகிச்சைகளும் அதற்கு பயன்படுத்தப்படும் மூலிகைகளும் நாம் வாழும் சூழலில் எம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன. 

அந்த வைகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும்.

சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும். நெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும். எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

 நெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது. நெல்லிக்காயை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நெல்லிக்காய் தித்திப்பு தயாரித்தல்:

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், வெல்லம், சுக்குப்பொடி, ஜாதிக்காய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்ல கரைசல் எடுக்கவும்.

இது, பாகு பதத்தில் வரும்போது, ஏற்கனவே வேகவைத்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்க்கவும். இதில், சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

நெல்லிக்காய் தித்திப்பை தயாரித்த நாளிலிருந்து ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது. அதனால், தினமும் ஒரு கரண்டி நெல்லிக்காய் தித்திப்பு சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். புண்கள் ஆறும். செரிமானத்தை தூண்டும்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com