தமிழ் සිංහල English
Breaking News

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது .!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், ஊழலை எதிர்க்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் மேற்கண்ட பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மிக காட்டமான விமர்சனங்களை முன்வைத்துவரக்கூடிய சூழலில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், தமிழகத்தில் எடப்பாடி – ஓபிஎஸ் அரசு எவ்வித இடையூறுமின்றி செயல்பட எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கிவருவதே மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசுதான். இன்று இவர்கள் யோக்கியவான்கள் போல பேசுவது வியப்பளிக்கிறது என விமர்சித்துள்ளார்.

முன்னதாக, ஊழல் ஒழிப்பு குறித்து அமித்ஷாவெல்லாம் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக இடதுசாரிகள் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com