தமிழ் සිංහල English
Breaking News

சமுகத்தை அடகு வைத்து சுகம் கண்ட ரிசாட் பதியுதீன்.

அண்மைக்காலமாக தேசிய அரசியலில் ஏற்பட்டு வருகின்ற மாற்றம் அதன் போக்கு மிக அவதானத்திற்க்குட்படுத்த பட்டு வருகின்ற சூழலில் முஸ்லீம்களின் நலிவடைந்த அரசியல் முஸ்லீம் கூட்டமைப்பு எனும் விடயத்தை பேசு பொருளாகவும் பார்வைக்குட்பட்ட விடயமாகவும் திருப்பி இருக்கிறது

இருந்தாலும் இவ்வாறான ஒரு கூட்டமைப்பை உருவாக்க பஷீர் சேகு தாவூத் எனும் முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் முனைந்திருப்பது முஸ்லீம் சமுகத்திற்கு தேவையானதா? என அலசி ஆராயக்கூடிய கட்டாயத்தில் முஸ்லீம் சமுகம் இருக்கிறது.

முஸ்லீம் கூட்டமைப்பு என்கின்ற வகையறைக்குள் அ.இ.ம.காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ,ஹசனலி ,பஷீர் சேகு தாவூத் போன்றோரின் அணி இன்னும் உதிரிகளாக பலரும் இணைந்து கொள்வது தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது

பஷீர் சேகு தாவூத் என்கின்ற முஸ்லீம் காங்கிரஸின் தவிசாளர் சமுக ரீதியான பாரதூரமான பிரச்சினைகளை எல்லாம் ஏற்பட்டு சமுகம் அவதியுறும் போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு பிளவுபட்டு வந்தவரா?

அல்லது முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் சமுக ரீதியான தவறுகளை முன் மொழிந்து வெளியேறியவரா? என்றால் இல்லை, மாறாக தனக்கு பாராளுமன்ற தேசிய பட்டியல் மு.கா தலைவரால் வழங்கப்படும் வரை அவரின் தவறுகள் என இவராலேயே குறிப்பிடப்படுகின்றவற்றுக்கு துணை நின்று வலுச்சேர்த்து தனது தேசிய பட்டியலுக்காக சுமார் பதினாறு ஆண்டுகள் சமுகத்தை அடகு வைத்து சுகம் கண்ட ஒருவரால் எவ்வாறு முஸ்லீம் கூட்டமைப்பை உருவாக்கி சமுகத்தை வழி நடாத்த முடியும் என எண்ண தோன்றுகிறது

அதன் விளைவாக தனக்கு தேசிய பட்டியல் கிடைக்க கட்சிக்குள் ஆதரவு அற்ற நிலையில் அம்பாரை மாவட்டம் எனும் முஸ்லீம்களின் அரசியல் அடித்தளத்தை கேள்விக்குட்படுத்தவும், மூத்த போராளிகள் பழி வாங்கப்படுவதாக கருத்து கூறவே ஹசனலியை கையிலெடுத்து அவருக்கு தேசிய பட்டியல் வழங்கும் படியும் கூறினார்.

ஹசனலி அதிகாரம் உள்ள செயலாளராக தன்னை பிரகடனப்படுத்தவும், தேசிய பட்டியலை பெறவும் தனது அரசியல் அந்திம காலத்தில் எடுத்த முயற்சி இறுதியாக முகம் குப்புற வீழ்ந்தமை தேர்தல் திணைக்களம் வரை சென்று சல்மானின் தேசிய பட்டியல் கடிதம் போலியாக காண்பிக்கப்பட்டு ஏமாற்றப்ட்டமையும், உயர்பீட கூட்டத்தில் வைத்து தனது செயலாளர் பதவி பறிக்கப்பட்டு வெளியேறிமையும் இவர்கள் தங்களின் பதவிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வெளி வந்தமைக்காக சான்று பகிரும்இவர்களினூடாக ஏற்படுத்த படுகின்ற கூட்டமைப்பு முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க கூடியவையாக இருக்குமா? அல்லது இவர்களின் பதவிகளை அடையும் பணியும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் எதிர் அரசியலை செய்யும் தளமாகவும் பயன்படுமா? என முஸ்லீம் சமுகம் சிந்தி்க்க வேண்டும்.

இவற்றை பயன்படுத்தி முஸ்லீம்களின் அரசியலின் தலைமைதுவத்தை ஏற்க கடை திறப்பதாலும், மூக்கு கண்ணாடி வழங்குவதாலும் பணத்தை இறைத்து தேர்தல் கால வித்தைகளை புரியும் ரிசாட் பதியுதீன் நிற்கிறார் என்பது இன்னும் மேலதிக சந்தேகங்களை உருவாக்கி விடுகிறது.

இவர்தான் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தை நிறைவு செய்த கையோடு வடமாகாண அதிகாரத்தையும் அதன் முழுமையான அபிவிருத்தியையும் மேற் கொள்ளுமாறு பணிக்கப்பட்ட போது அதனை பயன்படுத்தி தன்னுடைய வங்கி கணக்குகளையும் வசதி வாய்ப்புகளையும் இந்த நாடு வியக்குமளவு உயர்த்தி கொண்டார்

அவர் சொப்பின் பேக்கோடு வந்தவர் என அடிக்கடி கூறி மக்களை அதே நிலையில் வைத்தாலும் அவரின் நிலை வேறு என்பதை யாரும் அறியாமல் விட முடியாது

பொதுபல சேனா எனும் சிங்கள இனவாத அமைப்பை பயன்படுத்தி தனது அமைச்சில் வட்டரக விஜித தேரர் இருப்பதாக கூறி சமுகத்தை காட்டி கொடுத்து அதிலேயே மக்களின் உணர்வுகளை சூடேற்றி தான் தலைவராக பரிணமிக்க அலை மோதினார்.

வட மாகாண தமிழர்களின் வாக்குகளை பெற அங்கு கோவிலில் தனது மேலாடையை கழற்றவும் அம்பாரை மக்களின் வாக்குகளை பெற வேண்டு மென்றால் சாய்ந்த மருது பள்ளியில் இமாமத் செய்யவும் தயாரான மகா நடிகனாகவும் அரசியலுக்கு முழு இனத்தையும் விற்றுப் பிழைக்கும் அரசியல் வியாபாரி இந்த வியாபாரிதான் அண்மையில் வில்பத்து விடயத்தை திட்டமிட்டு பூதாகரமாக்கி அரசுக்கு எதிராக கோசமிட்டு அதை வைத்து ஆசாத்சாலி, பைசர் முஸ்தபா போன்றேரின் முயற்சியால் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டு ரவி கருணாநாயக்கு வழங்கப்பட இருந்த அமைச்சை காத்துக் கொண்டார்.

இவரின் அரசியல் தவறுகளை பதவிக்காக தான் மேற் கொள்ளும் கொந்தராத்து பினாமி அரசியலையும் மிக வலுவாக பேசவும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். தனக்கு வாக்களித்த வடபுல மக்களின் தேவைகளை இது வரை நிறைவு செய்ய முடியாமல் அதிலே அரசியல் லாபமடையும் ரிசாட் பதியுதீனால் கிழக்கு மக்களின் அரசியல் சுயத்தை உணர்ந்து கொள்ள முடியுமா? என்பது கூட முரண் நகையான விடயமாகும்.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசில் இறுதி வரை அவரை ஆதரித்து மேற் கூறப்பட்ட அரசியல் தலைவர்களையும் ஹக்கீமையும் விமர்சித்து முஸ்லீம் சமுகத்தை சதி வலையில் வீழ்த்தி பிழையாக வழி நடாத்துகிறார்கள் என கூறிய அதாஉல்லா இந்த கூட்டமைப்பு இணைந்து கொள்வது, மிக முட்டாள்தனமா செயற்பாடகவே உணர முடிகிறது

அம்பாரை மாவட்டத்தில் நிலையான வாக்கு பலத்துடனும் இந்த ஆட்சி மாறி சுமார் இரண்டு வருடங்களுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதாஉல்லாஹ் சொன்னது சத்தியமென முகநூலூடாகவும் செய்திகளிலும் மக்களின் மன நிலையிலும் உணரப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே நல்லாட்சி எனும் முஸ்லீம் மக்களை ஏமாற்றிய முயற்சியை மேற் கொண்டவர்களுடன் அதாஉல்லாஹ் இணைந்து கொள்ள முடியுமா?

இவ்வாறானதொரு கூட்டில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை எதிர்த்து அக்கரைப்பற்று எனும் ஊருக்கு வராமல் தடுத்த தலைவருடன் பல முறை நேரடியாக மோதிய சேகு இஸ்ஸதீனையும் இணைத்து பயணிக்க பஷீர் சேகு தாவூத் எடுக்கின்ற முயற்சியை அஷ்ரபின் போராளிகள் என தன்னை அடிக்கடி இனங்காட்டி கொள்ளும் அவரின் வழியை தொடரவும் தயாரான அதாஉல்லாஹ் வால் அங்கீகரிக்க முடியுமா? என்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டியவைஅரசியல் விமர்சகனாய் ஆய்வாளனாய் சிலேடையாக ஒரு விடயத்தை கூற முடியுமாக இருக்கிறது.

.பதவி நிலையையே தேர்தலையோ முண்ணிலைப்படுத்தும் அரசியல் கூட்டு எந்தொரு சமுகமாற்றத்தையும் கொண்டு வராது என்பதும், அதாஉல்லாஹ் வின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில் அவரால் கூட்டமைப்புக்கு செல்வது மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதும்

ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடியாக தொடர்புபட்ட ரிசாட், பஷீர், ஹசனலி போன்றோரால் மேற் கொள்ளப்படும் சர்வதேச திட்டமிடலாகவும் இவை இருக்கலாம் என்கின்ற அச்ச நிலை தொடர்பில் முஸ்லீம் சமுகமும் அதாஉல்லா என்ற மாற்று தலைமை சிந்திக்க வேண்டிய காலமாகவே இதை கருதுகிறேன்.

Dr.Y.L நிசார் ஹைதர்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com