தமிழ் සිංහල English
Breaking News

கல்முனை Dr.நௌஷாட் கான் லண்டனில் பேராசிரியராக பதவியுயர்வு..!

கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட Dr நௌஷாட் கான் Consultant Emergency Physician ஆக லண்டன் Doncaster Bassetlaw Teaching Hospital (NHS) இல் கடமை புரியும்போது Professor (பேராசிரியர்) ஆக பதவியுயர்வு பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

கல்முனை ஸாஹிறா ஈன்றெடுத்த தங்கப்புதல்வர்களில் ஒருவரான இவர் மர்ஹும் அல்ஹாஜ் அலியார் முஹம்மது கான் (ஓய்வு பெற்ற ஆசிரியர், பகுதித்தலைவர்) மற்றும் ஹாஜியானி றுக்கியா உம்மா முஹம்மது கான் (ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும் ஜனாப். MK இர்ஷாட் கான் (ஆசிரியர், 2nd Lieutenant, திறந்த பல்கலைக்கழக சட்டபீட 3ம் வருட மாணவன்) இன் சகோதர ரும் ஜனாபா ஜஹானாவின் அன்புக்கணவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்

இவர் தனது வைத்திய பட்டதாரிப்படிப்பை இலங்கையில் 1998 இல் முடித்தபின் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச்சென்று 2005 இல் தனது MSc ஐ ‘Diabetes’துறையிலும் டிப்ளோமா பட்டத்தை ‘பொதுச்சுகாதாரம்’ இலும் பெற்றுக் கொண்டார்.

இவர் தனது Emergency Medicine Speciality பயிற்சியை நிறைவுசெய்த பின் MRCEM(UK) MECEM (UK) என்ற பட்டங்களையும் பெற்றார். பின் இவர் Passionate about Teaching and Transforming Emergency Medicine training system ஐ லண்டனிலும் உலகளாவிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். மேலும் ‘Hybrid’ International Emergency Medicine program இன் மூன்று Concept Developers களில் இவரும் ஒருவராவார். இது தொடர்பான பல வெளியீடுகளையும் செய்துள்ளார்.

இவர் சர்வதேச அவசர சிகிச்சைப் பிரிவின் (ICEM) இன் CO- Founder உம் லண்டன் QiMED இன்பிரதிப் பணிப்பாளரும் நேபாள் நாட்டின் Chitwan Medical College இன் Emergency Medicine Associate Professor உம் ஆவார்.

இவர் தனது 46 வது இளம் வயதிலேயே Professor தரத்திற்கு உயர்வு பெற்றது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இத்துறையில் இலங்கையின் முதல் Professor உம் இவரேயாவார். இவரது சேவையும் பணிகளும் இலங்கைத் திருநாட்டிற்கும் எம் சமூகத்திற்கும் சென்றடையவும் மேலும் பல பதவியுயர்வுகளையும் பெற்று நீடூழி வாழவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

எஸ்.தஸ்தகீர்
கல்முனை

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com