தமிழ் සිංහල English
Breaking News

அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை.!

கண்டி திகன கலவரத்தின் பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு இன்று தெல்தெனிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வேளையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமித் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணை மற்றும் 5000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்டி மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தெல்தெனிய நீதிமன்றம் இவர்களுக்கான பிணையை நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது.

அமித் வீரசிங்க மீதுள்ள பல வழக்குகளில் ஒன்றிற்கே இந்த பிணை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணைகளின் போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் ஏஆர்சி ARC சட்டத்தரணிகள் குழுவினரும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகியிருந்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com