தமிழ் සිංහල English
Breaking News

ஆட்சி மாற்றம் தேவை .!

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்குமான நிரந்தர தீர்வு ஆட்சி மாற்றத்தின் பின்னரே இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஒ.சி. நிறுவனத்துடன் செய்து கொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருட்களின் விலை மாற்றம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என்றும் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருட பொருளாதார முகாமைத்துவத்தின் காரணாக பொருளாதாரம் பல துறைகளில் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் தற்போது அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையினை மறைக்க கடந்த அரசாங்கத்தின் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிரந்தர தீர்வு கிடைக்கப் பெறும் என்றும் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com