தமிழ் සිංහල English
Breaking News

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகின்றது .

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலை அல் அக்ஷா பள்ளிவாயல் வடிவத்திற்கு அதனை நிர்மானிக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கனவு நனவாகி வருகின்றது.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பள்ளிவாயல் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயலேயாகும்.

புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் என்ற பெயரே இந்தப் பள்ளிவாயலுக்கு இருந்து வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த பள்ளிவாயலின் பெயர் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் என பெயர் மாற்றப்பட்டது.

இந்தப் பள்ளிவாயலின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய பலர் நினைவு கூறப்பட வேண்டியவர்கள் அதில் மர்ஹும் மரைக்காhர், றமழார் ஜே.பி, கே.பி.மஹ்மூத்லெவ்வை இன்றும் ஹயாத்துடன் இருக்கின்ற வெள்ளத்தம்பி இப்றாகீம் காக்கா, செய்யது அகமது மௌலவி (துஸாறா மௌலவி) பேஷ் இமாமாக இருக்கின்ற முஸ்தபா மௌலவி இப்படி பலரை குறிப்பிட முடியும்.
புதிய காத்தான்குடி வரலாற்றில் முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாயலும் இந்த பள்ளிவாயலேயாகும்.

அந்த வரிசையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உதவியும் ஒத்துழைப்பும் இந்த பள்ளிவாயலுக்;கு என்றும் இருந்தே வருகின்றது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஊர் வீதியில் பிறந்தாலும்; வளர்ந்து கல்வி கற்று அரசியலில் பிரவேசித்த ஒரு பகுதியே புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் அமைந்துள்ள பிரதேசமாகும்.

இந்த புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாகத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கத்தவராகவும் அதன் செயலாளராகவும் இருந்துள்ளதுடன் அதன் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதியானகவும் ஒத்துழைப்பாகவும் என்றும் இருந்தே வருகின்றார்.

நானும் இப்பகுதியில் வளர்ந்தவன் கல்வி கற்றவன் இந்தப் பள்ளிவாயலோடு நெருக்கமாக இருந்தவன் என்ற வiயில் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது

இந்தப்பள்ளிவாயலில் முதன் முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்படுவதற்கு முதலன்று இரவு பலரும் பள்ளிவாயலின் வளாகத்தில் கொட்டு வதற்காக மண் பெட்டி சுமந்தார்கள்.
ஹிஸ்புல்லாஹ்வும் மண் பெட்டி சுமந்து அப்பள்ளிவாயல் வளாகத்தில் கொட்டுவதற்குதவினார்

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

இவ்வாறு என்றுமே அவரது பங்களிப்பு அப்பள்ளிவாயலுக்கு இருந்து வருகின்றது.
இந்த வகையில் இப்பள்ளிவாயலை பள்ளிவாயல்களுக்கான கட்டடக் கலையுடன் கூடிய பள்ளிவாயலாக நிர்மானிக்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருந்து வந்தது
.
சாதரண ஒரு பள்ளிவாயலாக அதனைக் கட்ட வேண்டும் என்றிருந்தால் அதை எப்போதே கட்டி முடித்திருப்பார். ஆனால் அவரது கனவும் முயற்சியும் மஸ்ஜிதுல் அல் அக்ஷா வடிவத்தில் நிர்மானிக்க வேண்டும் என்பதேயாகும்.

அவரது முயற்சி கை கூடியுள்ளது. இன்று அப்பள்ளியாவல் சகல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளிவாயலாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு தேவையான அத்தனை நிதியுதவிகளையும் அவரே செய்து வருகின்றார்.

இந்தப் பள்ளிவாயலின் கட்டட நிர்மானப்பணிகள் நிறைவு பெறாமல் இருக்கின்றது என பலரும் விமர்சித்தாலும் இந்தப் பள்ளிவாயலின் கட்டட நிர்மான வேலைகளை துரிதமாக முடித்து அதனை திறந்து தொழுகைக்காக பயன் படுத்த வேண்டும் என்பதில் இராஜாங்க அமைச்சர் காட்டும் ஆர்வமும் அவசரமும் மிகத்தெளிவாகவே விளங்குகின்றது.

இதனடிப்படையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று (8.7.2018) ஞாயிற்றுக்கிழமை காலை அப்பள்ளிவாயலுக்கு சென்று அதன் கட்டட நிர்மான வேலைகளை பார்வையிட்டதுடன் துரிதமாக நிர்மானப் பணிகளை நிறைவு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதற்கு தேவையான அத்தனை மாபில் கற்கள் பள்ளிவாயல் கட்டடக் கலையுடன் கூடிய பல் வேறு உப கரணங்களும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்த பள்ளிவாயல்; கட்டட நிர்மானப் பணிகளை நிறைவு செய்து திறந்து வைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் இந்தப் பள்ளிவாயல் கட்டட நிர்மானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீண்டும் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிப்பதற்;கு நாம் பிராத்தனை செய்வதோடு இதனை நிர்மானிக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பிராத்திப் போமாக

எம்.எஸ்.எம்.நூர்தீன்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com