தமிழ் සිංහල English
Breaking News

கல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார்.!

கல்முனை பழமைவாய்ந்ததொரு பிரசித்தி பெற்ற நகரம் என்பது வரலாறு கூறும் ஒன்றாகும். அது கிழக்கின் முகவெத்திலையாகும். இதில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

கல்முனையின் எழுச்சிக்கு வித்திட்ட முதல் மகன் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அவரோடு சேர்ந்து தோளோடு தோள் நின்று உழைத்தவர் முன்னாள் பட்டினசபை உபதவிசாளரும் எனது தாய் மாமனுமான வைச்சேமன் எம்.எஸ்.ஹமீது ஆவார். அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

கல்முனையில் அன்றுமுதல், இன்றுவரை எவ்வாறான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் போதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூப்பாடுகள் போட்டு, இனச்சாயம்பூசி அந்த அபிவிருத்திகளை தடுக்க முனவைது வரலாறாகும். எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் அன்று கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடிக்கு மதில் வேலி கட்டியது முதல் இன்று அடிக்கடி பேசப்படும் கல்முனை நகர அபிவிருத்தி வரையான சகலதிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது அந்த இனவாதிகளின் வழமையான பண்பாகும்.

ஆனால் எம்.எஸ்.காரியப்பர் அவர்களது அறிவு, மொழியாற்றல், தைரியம், சமுகம்பற்றிய தூரநோக்கு என்பன இவர்களது அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி கண்டது. இன்று அவ்வாறல்ல. அந்த தடைகளையும், எதிர்ப்புகளையும் எதிர்த்து நிற்க தைரியம் இல்லாவிட்டாலும் அவைகளை வைத்து மக்களை உணர்ச்சியூட்டி அந்த சம்பவங்களை தேர்தல் காலங்களில் உண்டியலாக குலுக்கி வாக்குச் சேகரிப்பதில் மட்டும் அவர்கள் கண்ணாக இருக்கின்றார்கள். இவ்வாறான உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் தொடர்ந்தும் மடையர்களாக இருக்கும்வரை நாம் கோளைகளாகவே இருப்போம். குறவன் குடில் கட்டுவதுபோல மழை பெய்யும்போது, விடிந்ததும் கூரையை வேயவேண்டும் என்று கூறுவோம். விடிந்து மழை முடிந்ததும் அதை மறந்து, பழைய குருடி கதவை திறடி என்ற நிலைக்கு மாறிவிடுவோம். இந்த நிலையில் நின்றும் மாற்றம் வராதவரை நாம் மாற மாட்டோம்.

அறிவூட்டுவதற்கு பதிலாக உணர்ச்சியை மட்டும் ஊட்டி, ஊரைச்சுருட்டி கையில் எடுப்பவர்களால் நமது கல்முனை கண்டதுதான் என்ன? கல்முனையின் தென்புறத்திலிருந்து கலிமாச்சொன்ன ஒரு சில நம்மவர்களால் அடிக்கடி நமக்கெதிரான கூப்பாடுகள். கல்முனையின் வடபுறமாக உள்ள குப்பார்களாலும் நமக்கெதிரான கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள். இருதலைக்கொள்ளி எறும்பாக நாம் வாழ்கின்றோம்.

கல்முனையின் பொது நிர்வாகம் 1950களிலிருந்து கீளே கறிப்பிடப்படும் பட்டியலபடி மூவின அரச அதிகாரிகளாலும் எந்தவித பாகுபாடுமின்றி நிர்வகிக்கப்பட்டது.

பிரதேச இறைவரி உத்தியோகத்தர் (டி.ஆர்.ஓ) நிர்வாகம்:

1946ல் வன்னிமை நிர்வாகமுறை இல்லாமலாக்கப்பட்டு பிரதேச இறைவரி உத்தியோகத்தர் டி.ஆர்.ஓ நிர்வாகம் இஸ்தாபிக்கப்பட்டது. அது மணற்சேனையில் உள்ள யோசப் காடியர் அவர்களது வீட்டில் வாடகைக்கு இயங்கி வந்தது. 1958ல் கந்தவாசா கட்டிடத்தில் இயங்கியது. 1973ல் கல்முனை பட்டினசபை காரியாலயத்துக்கு மாற்றப்பட்டது.

காலம்;: பெயர்;: பதவி: இடம்:

1950 -1957 எஸ்.எம்.தியோப்லஸ் டி.ஆர்.ஓ காடியர் வளவு, மணல்சேனை
1961 -1963 கே.முருகேசுப்பிள்ளை சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
1964 -1965 நடராசா டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
ஆர்.எஸ்.வைரசிங்ஹ சீ.ஏ.எஸ். டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
ஏஸ்.ஆர்.குமாரரத்ன டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
ஏ.டீ.எஸ்.டிக்ஷன் சில்வா சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
கே.கொம்பப்பிள்ளை சீ.ஏ.எஸ். டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
கே.டப்ளிவ்.விக்ரசில்வா சீ.ஏ.எஸ்.டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
கே.சேமசுந்தரம் டி.ஆர்.ஓ கந்தவாசா, கல்முனை
ஏஸ்.ஆர்.குமாரரட்ன டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை
ஏச்.ஆர்.விஜயசிறி எஸ்.எல்.ஏ.எஸ் டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை
1971 சந்திர ரத்ன எஸ்.எல்.ஏ.எஸ் டி.ஆர்.ஓ பட்டினசபை வளவு,கல்முனை
1980 -1986 ஏ.கால்தீன் எஸ்.எல்.ஏ.எஸ் ஏ.ஜி.ஏ பட்டினசபை வளவு,கல்முனை
1986 -1991 எம்.எச்.முகினுத்தீன் எஸ்.எல்.ஏ.எஸ் ஏ.ஜி.ஏ பட்டினசபை வளவு,கல்முனை
1991 -1994 ஏ.எல்.எம்.பழீல் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை
1994 -1995 எம்.ஐ.அமீர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை
1996 -2003 ஏ.எல்.எம்.பழீல் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை
2003 -2007 ஏ.எம்.அன்சார் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் பட்டினசபை வளவு,கல்முனை
2007 (ஐ_ன்) ஏ.மன்சூர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை
2007 -2014 எம்.எம்.நௌபர் எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை
2014 (மே) ஐ.எம்.ஹனீபா எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை
2014 -2015 ஏ.மங்கள விக்ரம ஆராச்சி எஸ்.எல்.ஏ.எஸ்டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை
2015.05.18 முதல் எம்.எச.;.கனி எஸ்.எல்.ஏ.எஸ் டி.எஸ் மாநகரசபை வளவு,கல்முனை

ஆகிய அதிகாரிகள் பிரதேச செயலகம் கல்முனை என்ற நாமத்தின்கீழ் தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றனர்.

கல்முனை பிரதேசம் 58 கிராமசேவர்களை உள்ளடக்கிய முஸ்லிம்,தமிழ்,சிங்களம் எனும் மூன்று சமுகம்களையும் ஒன்றாக நிர்வகிக்கும்’கல்முனை பிதேசசெயலகத்தினால்’ தொடர்ச்சியாக ஆளப்பட்டுவந்தது. தமிழ், முஸ்லிம், சிங்கள அதிகாரிகள் அதில் கடமைசெய்துவந்தனர், வருகின்றனர்.

கல்முனை பிரதேசசெயலகம் 95வீதம் தமிழர்கள்வாழும் கல்முனை 1ம் குறிச்சியில் பொலிஸ் நிலையம்,கத்தோலிக்க ஆலயம்,வெஸ்லி உயாதரபாடசாலை எனும் தமிழ் பாடசாலை ஆகியன சூள உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது.

1986 முதல் கல்முனையில் உள்ள முஸ்லிம்களது வர்த்தகத்தில் காட்புணர்ச்சிகொண்ட பயங்கரவாதிகள் 1990 வரைசுமார் 7க்கு மேற்பட்டமுறைகள் கல்முனையை தாக்கி முஸ்லிம்களதும், கல்முனை – முனையில் 1912 முதல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த தென்னிலங்கை சிங்களவர்களதும், பிரதேச முஸ்லிம்களதும் மீன்பிடிவாடிகள், படகுகளையும் கொள்ளையிட்டும், தீவைத்தும் அளித்தனர். இதனால் மாதக்கணக்கில் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இக்காலகட்டத்தில் தமிழர்கள் செறிந்தபிரதேசத்துள் உள்ள கல்முனை பிரதேச செயலகத்தில் கடமைகளை பெறமுடிபாது முஸ்லிம்களும், சிங்களவர்களும் கஸ்டப்பட்டனர். இருந்தாலும் கல்முனையில் வாழும் மூவினமும் பிரிந்துவாளக்கூடாது எனும் நோக்கில் ஒரேபிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தும் இயங்கிவந்தனர்.

கல்முனையின் பொதுநிர்வாகத்தை கூறுபோட்டு முஸ்லிம்களது வர்த்தகமையமான கல்முனையை செயலிளக்க வைக்கவேணும் எனும் குறுகியநோக்கில் தமிழ் ஆயுதக் குழக்களும்,தமிழ் அரசியல் வாதிகளும் தங்களது ஆயுதபலத்தையும், இந்திய அமைதிப்படையின் ஆதரவையும், அன்றைய வடகிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் பாவித்து 1989ல் ஒரே கூரையின்கீழ் இயங்கிய உபபிரதேச செயலாளரது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் உள்ள கல்முனை வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான கட்டிடத்தை அடாத்தக கையகப்படுத்தி அதில் உபபிரதேச செயலகம் எனும் நாமத்தில் 29 தமிழ் குறிச்சிகளை வைத்து இயங்கலாயினர்.

ஒரே கூரையின்கீழ் இயங்க வேண்டிய உப பிரதேச செயலகம் வேறு ஒரு கூரைக்கு சென்றது. இதற்கு மாகாண சபையும்; மறைமுகமாக ஆதரவு வழங்கியது.

காணி,நிதி உட்பட்ட செயற்பாடுகள்; 58 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் கல்முனை மாநகரவளவுக்குள் இயங்கும் கல்முனை பிரதேச செயலகத்திலேயே இன்றும் நடைபெற்று வருகின்றது.

பொதுநிர்வாக,மாகாணசபைகள் உள்நாட்டலவல்கள் அமைச்சின் செயலாளரால் 03.09.1993ம் திகதி கல்முனை பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி 28.07.1993ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில் நாட்டில் 28 உப பிரதேசசெயலகங்கள் இயங்க அனுமதி வழ்கப்பட்டது. அதன் 27வது செயலகமாக கல்முனை உபசெயலகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்திற்கென சொந்தநிலத்தில் ஒருசெயலககட்டிடம் இல்லாதகுறை உணரப்பட்டது. 2004ம் ஆண்டின் சுணாமி அனர்த்தத்தின்பின் தொண்டார்வ நிறுவனத்தின் உதவியுடன் கல்முனை பிரதேசசெயலகத்திற்கென சொந்த இடத்தில் ஒருசெயலக கட்டிடம் கட்டப்பட்டது.அந்தகட்டிடத்தல் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லில் கல்முனை பிரதேசசெயலகம் என்ற வாசகமே பொறிக்கப்பட்டிருந்தது.

உபபிரதேசசெயலகமாக இயங்கிய சிறிதுகாலத்துள் கட்டிடத்தில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை அகற்றிவிட்டு’பிரதேசசெயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இலங்கை அரசியரமைப்பின்; 13ம் திருத்தசட்த்தில் ‘இனரீதியான நிர்வாகம்’ இயங்க விதிக்கப்பட்ட தடையைமீறி சட்டவிரோதமாக இயங்குகிறது. இக்கட்டிடமானது கல்முனை பிரதேச செயலகத்திற்கு எனகட்டப்பட்ட கட்டிடம் என்பதை கட்டிடத் திணைக்களம் அல்லது அம்பாரை மாவட்டசெயலக பொறியியல் பகுதிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

2011.11.08ம் திகதிய அரசாங்க நிர்வாகமற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின், எல்லை நிர்ணய குழுவின் எச்.ஏ.எப்.2-டி.இ.சி.சி.ஓ.எம-11-2009 எனும் சுற்றநிருபத்தில் இனரீதியாக நிர்வாகம் நடாத்த விதிக்கப்பட்ட தடையையும், புதிய பிரதேசசெயலகம் உருவாக 50-75 கிராமசேவகர்கள் இருக்கவேண்டும் என்ற கட்டளைக்கும் மாறாகசெயற்படுகின்றது.

அம்பாரை மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரப்பகுதி அதன் இணையதளத்தில் கல்முனை எம்.டி (முஸ்லிம் பிரிவு) 29,கல்முனை ரி.டி (தமிழ் பிரிவு) 29 என பிரித்து மேற்படிசுற்றுநிருபம், அரசியலமைப்பு ஆகிவைகளுக்கு மாறாக இயங்குகிறது. இதற்குயார் அனுமதி வழங்கியது?

கல்முனை பிரதேச செயலகத்தின் உப பிரதேசசெயலாளர் திருவாளர் எஸ்.கே.லவநாதன் அவர்கள் பிரதேச செயலாளர், கல்முனை தமிழ் பிரிவுஎன இறப்பர் முத்திரை பாவித்து ஒப்பமிடுகிறார். கெசட்டில் பிரசுரிக்கின்றார்.

இலங்கை சனநாயக சேசலீச குடியரசின் பாராளுமன்றம் 1992ம் ஆண்டின் 58ம் இலக்க தத்துவங்கள் கைமாறல் (பெரும்பாகச் செயலாளர்கள்) சட்டம் என 1992 நவம்பர்மாதம் 13ம் திகதிஅச்சிட்டுஅதன் 2ம் பிரிவில் ‘அமைச்சர் கசற்றில ;’வெளியிடப்படும் கட்டளை மூலம் நிர்வாக மாவட்டம் ஒவ்வொன்றிற்கும் அத்தகைய எண்ணிக்கையினதான பெரும்பாகங்களை தாபிக்கலாம். அத்தகைய கட்டளை ஒவ்வொன்றும் (இதனகத்து பின்னர் ஒரு’பெரும்பாகம்’எனக்குறிபிட்டு செய்யப்படும்) பெரும்பாக செயலாளரின் பெரும்பாகம் ஒவ்வொன்றினதும் பெயரையும் அதன் எல்லைகளையும் தருதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படிசட்டத்திற் கமைய கல்முனை பிரதேசசெயலகம் இலங்கை நில அளவை திணைக்களத்தின் வரைபட இலக்கம் 2017-56ன் படியும், கல்முனை பிரதேச செயலகத்தின் மூலம் 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பி.எல்.என்-ஆர்.டி.ஐ-2017-1-20ம் இலக்க 2017.11.08ம் திகதிய கல்முனை பிரதேச செயலக கடிதத்தின் படியும் குறிப்பிடப்பட்ட எல்லையுள். ‘பிரதேச செயலகம் கல்முனைதமிழ் பிரிவு’ என ஒன்றும் குறிப்பிடப் படவில்லலை.

ஆனால் மேற்படி சட்டத்திற்குமாறாக உப பிரதேசசெயலகமானது எல்லை இல்லாது இன ரீதியாக’பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இயங்குகிறது.

1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டத்தின் பொருள் கோடல் எனும் 9ம் பிரிவில் ‘பெரும்பாகம் ஒன்றின் தொடர்பிலான’ என்பது அரசாங்கத்தினால் அப்பெரும்பாகத்திற்கு நியமிக்கப்பட்ட பெரும்பாக செயலாளர் என்று பொருள்படும் என்பதுடன் அத்தகைய பெரும்பாக செயலாளருக்கு அளிக்கப்பட் அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட அல்லது அவருக்கு குறித்தொதுக்கப்பட்ட ஏதேனும் தத்தவத்தை, கடமையை அல்லது பணியை பிரயோகிப்பதற்கு, நிறைவேற்றுவதற்கு, அத்துடன் புரிவதற்கு பெரும்பாக செயலாளரினால் எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பெற்ற எவரேனும் உதவிபெரும்பாக செயலாளரையும் உள்ளடக்கும்’எனக் குறிப்பிடும் போது ‘பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’ என நாமமிட்ட கடிதத் தலைப்பில், கல்முனை பிரதேச செயலாளரினால் உப பிரதேச செயலாளர் என எழுத்தில் அதிகாரம் அளிக்கப் பெற்றவர் தன்னை பிரதேச செயலாளர்; ‘பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இயங்குவது நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறும் செயலாகும்.

கல்முனை பிரதேச செயலாளரிடம் கல்முனை பிரதேசசெயலகத்தின் கீழ் இயங்கும் உப பிரதேச செயலகத்தின் மாதாந்த சம்பளம் உட்பட ஏனைய செலவகள்,அதன் உத்தியோகத்தர்களது விபரங்களை தகவலறியும் சட்ட மூலத்தின் கீழ் கேட்டபோது, 2017.11.01ம் திகதிய இல: பி.எல்.என்-ஆர்.டி.ஐ-2017-1-20ம் எனும் கடிதத்தின் மூலம் பிரதேச செயலகம், உப பிரதேச செயலகம் எனப் பிரித்து மொத்தம் ரூபா:10,130,210-40 சதம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இரட்டிப்பு ஊழியர்கள் மூலம் இரு காரியாலயங்களுக்கும் மாதம் தலா ரூபா:5,000,000ஸ்ரீ வரை செலவாகின்றது. இந்த மேலதிக செலவு சுமார் 28வருடங்களாக செய்யப்படுகின்றது. (500000-ஸ்ரீ ஓ12ஓ28ஸ்ரீ 168000000-ஸ்ரீ)

2017.11.01ம் திகதியிட்டு என-ஆர்.டி.ஐ-2017-1-20 எனும் கடிதத்தின் மூலம் கல்முனை பிரதேசசெயலாளர் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலாளர் என விலாசமிட்டு அங்குகடமை செய்யும் உத்தியோகத்தர்களது விபரங்களை கேட்டபோது 07.11.2017ம் திகதி ஏ.டி.எம்-சி.ஏ.ஆர்.டி.ஏ.ஆர்-03-03 ஆம் இலக்க கடிதத்தில் பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவுஎனும் கடிதத் தலைப்பில் ஒரு பிரதேசசெயலாளர், 29 கிராமசேவகர்கள் உட்பட மொத்தம் 217 ஊழியர்கள் கடமை செய்வதாக குறிப்பிட்டு உப பிரதேச செயலாளர் தன்னை பிரதேச செயலாளர்,’பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு’என இறப்பர் முத்திரையிட்டு ஒப்பமிட்டுள்ளார்.

மேற்படி விடயங்கள் நாட்டின் அரசியலமைப்பு, அமைச்ரவை தீர்மானம், சுற்றுநிருபம், நிதி முகாமைத்தவம் ஆகியவைகளுக்கு மாறாக இனரீதியக செயற்பட்டு கல்முனையில் இனக்கியத்தை சீர் குலைக்கும், பயங்கரவாதிகளால் இனரீதியாக உருவாக்கப்பட்ட நிர்வாகங்களை இல்லாமல் செய்ய நீதி தேவதையின் முன் செல்ல வேண்டிய கட்டாய தேவையின் நிமித்தம் கல்முனை பிரதேச செயலாளரிடம் கேட்டு அறிந்ததை போல அம்பாரை மாவட்ட செயலாளரிடம் தகவலறியும் சட்டத்தின் கீழ் எனது கோரிக்கைகளை முன்வைத்தேன்.

சென்ற 2017.11.14ம் திகதி கடிதம் மூலம் நான் மாவட்ட செயலாளரிடம் எனது கோரிக்கைகளை முன்வைத்தபோது. அவர் அதை பொருட்படுத்தவில்லை. பின் முறைப்படி 20.02.2018ம் திகதி தகவல் அதிகாரிக்கு உரியபடிவத்தை பூத்திசெய்து விண்ணப்பித்தேன். பதிலில்லாததால் மாவட்ட செயலாளருக்கு மேன் முறையீடு செய்தேன். அதற்கும் செவி சாய்க்காததால் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு முறையிட்டேன். எனது இல:ஆர்.டி.ஐ.சி அபீல்-221-2018 எனும் 2018.05.17ம் திகதிய கடிதத்தின் மூலம் 12.06.2018ம் திகதி மு.ப.10 மணிக்கு ஆணைக்குழு முன் சமுகம் கொடுத்து மாவட்ட செயலாளர் தரமறுத்த உப பிரதேச செயலகமாக இயங்க அமைச்சரவை அனுமதி வழங்கியமை பற்றிய கடிதத்தை தகவலறியும் ஆணைக்குழுவின் சான்றுப்படுத்தலுடன் பெற்றுக் கொண்டேன். ‘அல்ஹம்துலில்லாஹ்’

என்னால் ஒன்று சோக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து சுமார்100 மீட்டருக்குள் மாதம் ரூபா: 500000 ரூபா செலவுடன் 188 இரட்டிப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அமைச்சரவை தீர்மானம், அரசியலமைப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணய குழுவின் அங்கிகாரம் என பொதுவில் நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறி’ கல்முனை தமிழ் பிரதேச செயலகம்’ இயங்குகின்றது என்பது தெளிவாகிவிட்டது.

நாட்டில் எங்குமில்லாதவாறு கல்முனையில் மிகமோசமான முறையில் இனரீதியான அரசநிர்வாகம் நடக்கின்றது. ஒன்று சட்டவிரோத தமிழ் பிரதேச செயலகம். மற்றையது கல்முனை மிருக வைத்திய காரியாலயம்’. ஒரே கூரை, ஒரு மிருக வைத்தியர் தமிழ், முஸ்லிம் என பிரித்து கொத்தணி காரியாலயமென பெயர் பலகை வைத்து நாட்டின் சட்டத்திற்கு மாற்றமாக இயங்குகிறது. அடுத்தது. கிழக்கு மாகாண மீன்பிடி காரியாலயம். இனரீதியாக இயங்குகிறது. தரைவைப் பிள்ளையார் கொயிலுக்கு மேற்கே உள்ள குளம் வெள்ளகாலத்தில் ஊரின் நீர் வடிந்தோடவும், அந்த நீரைத் தேக்கி வயலக்கு பாவிக்கவுமென பண்டு தொட்டு இருந்து வருகின்றது. கோயில் நீவாகம் அந்த குளத்தில் சுணாமி இடுபாடுகளை நிர்ப்பாசண திணைக்கள அதிகாரிகளது தடை அறிவுறுத்துதலையும் பொருட்படுத்தாது ஆயுத இயக்கங்களின் தயவால் சுமார் 2 ½ ஏக்கர்வரை மூடியுள்ளது.

பொதுவில் இலங்கை நாட்டின் அரசியலமைப்பு, சட்டம், அமைச்சரவை தீர்மானம் சகலதையும் மதியாது கல்முனையில் ஒரு காட்டுமிராண்டி நிர்வாகம் நடப்பதை நமது அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் மானகர சபை உறுப்பினாகள், பொhது அமைப்புகள் சகலதும் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பது நியாயமா?

நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறி செயற்படும் தமிழர்கள், தங்களது சட்டமறுப்பான செயற்பாட்டை அங்கிகரிக்குமாறும், அவைகளை தரமுயர்த்தித் தருமாறும் பாராழுமன்றம் முதல் கல்முனை மாநகர சபை வரை சகல இடங்களிலும் கேட்பதும்,அதற்கு நம்மவர்களில் சில பொறம் போக்குகள் ஆதரித்து பேசுவதும் முஸ்லிம்களது இதயமாகிய கல்முனை பட்டினத்தை கூறுபோட்டு சிதைக்கும் அவர்களது மனோ நிலையையும், அரசியல் வங்குரோத்தையும் தெழிவுபடுத்துகிறது.

நமது அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒருபோதும் இந்த சட்ட மறுப்பான நிர்வாகத்தை இல்லாமல் செய்ய முயலமாட்டார்கள். அவர்களுக்கு இனப்பூசல் இருந்தால்தான் தமிழன் வருவான், தமிழன் வருவான் என தேர்தல் காலங்களில் நமது மடையர்களது வாக்குகளை சேர்ப்பதற்கும், அதேபோல சோனி வருவான், சோனி வருவான் என தமிழர்களது வாக்கை தமிழ் அரசில்வாதிகள் சேர்ப்பதற்கும் தேர்தலில் வென்றபின் இரு இன அரசில்வாதிகளும் கை கோர்த்து கும்மாளமிட்டு நம்மவர்களை மடையர்களாக்குவாதற்கும் இது ஒரு தேர்தல்கால உண்டியல் என்பதால் முஸ்லிம் அரசியல் வாதிகள் எதையும் கண்டும் காணாதவர்கள் போல இருக்கின்றார்கள். ஆதலால் இதற்கு ஒரு முடிவுகட்ட நான் நீதி மன்றம் செல்ல தீர்மானித்துள்ளேன்.

1914 முதல் இதுவரை எனது சொந்த செலவிலேயே ‘ஒம்புட்ஸ்மன்’ முதல் சகல வழிகளிலும் செலவு செய்து நீதிமன்றம் செல்ல தேவையான சகல ஆவணஙங்களையும் ஒன்று சேர்த்துள்ளேன்.

ஹாஜி நஸீர்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com