தமிழ் සිංහල English
Breaking News

அர்ஜுன மகேந்திரனை ,பிரதமர் ரணில் நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் .!

சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து தப்பிச்சென்று சிங்கப்பூரில் வசித்து வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள உலகநாடுகளின் உச்சிமாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார்.

நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் உச்சிமாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரையாற்றுகின்றார்.

உச்சிமாநாட்டை தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com