தமிழ் සිංහල English
Breaking News

டிரம்ப் – புதின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும் .!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகிற ஜூலை 16 ஆம் தேதி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்கவுள்ளார் என வெள்ளி மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெறும் எனறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களது இந்த சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது.
கடந்த மாதம் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னை சந்தித்த, டிரம்ப் இப்போது, ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இரு நாட்டு முக்கிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் பின்வருமாறு, கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கவும், உலகளவிலும் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com