தமிழ் සිංහල English
Breaking News

கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./!

கொழும்பு – பறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விளைவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், குறித்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதற்காக 6 தீயணைப்பு பிரிவு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீவிபத்தில் துணிக்கடை ஒன்றும், அதற்கு அருகில் இருந்த பெண்களுக்கான பை (Hand Bags) கடையுமே தீப்பற்றி எரிந்துள்ளது.

இதில் ஒரு கடை முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளதுடன், துணிக்கடை பகுதியளவில் எரிந்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com