தமிழ் සිංහල English
Breaking News

ரோஹிங்­ய முஸ்­லிம்­களின் நிலைமை பரி­தா­ப­க­ர­மாக உள்­ளது.!

மியன்­மாரில் நடை­பெற்று வரும் கல­வரம், வன்­மு­றை­களில் அங்­குள்ள ரோஹிங்­யா முஸ்­லிம்கள் ஏரா­ள­மானோர் அண்டை நாடான பங்­க­ளா­தேஷில் தஞ்சம் புகுந்­துள்­ளனர்.

அவர்­களைச் சமா­ளிக்க முடி­யாமல் வங்­க­தேச அரசு திணறி வரு­கி­றது. அங்கு சுமார் 7 இலட்சம் முஸ்­லிம்கள் தஞ்சம் புகுந்­துள்­ள­தாகத் தெரி­கி­றது.

கடந்த மே மாதத்தில் ஐ.நா. பாது­காப்புக் கவுன்சில் பிர­தி­நி­திகள் குழு மியன்­மா­ருக்குச் சென்று அங்­குள்ள நிலை­மையை ஆய்வு செய்­தது. வங்­க­தே­சத்தில் தஞ்சம் புகுந்­துள்ள அக­தி­க­ளி­டமும் நிலை­மையைக் கேட்டு பாது­காப்பு கவுன்சில் குழு ஆய்வு செய்­தது.

இந்­நி­லையில் ஐ.நா. பொதுச் செய­லாளர் அண்­டோ­னியோ குத்­தேரஸ் ட்விட்­டரில் கூறி­ய­தா­வது: வங்­க­தே­சத்தில் உள்ள ரோஹிங்­ய முஸ்­லிம்­களின் நிலைமை பரி­தா­ப­க­ர­மாக உள்­ளது. கற்­ப­னைக்கு எட்­டாத அளவில் அங்கு அட்­டூ­ழி­யங்கள் நடந்­துள்­ளதை நான் பார்த்தேன். வங்­க­தேசத்தின் கொக்ஸ் பஸார் பகு­தியில் உள்ள ரோஹிங்­ய முஸ்­லிம்கள் சிலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேலும் முகாம்­களில் பெண்கள் மீதான பலாத்­கார சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன.

அவர்கள் தங்­க­ளுக்­கான நீதியைக் கேட்­கி­றார்கள். மேலும் பாது­காப்­பாக நாடு திரும்­பவும் அவர்கள் உதவி கோரு­கின்­றனர். உலகில் அதிகஅளவில் பாகு­பாடு பார்க்­கப்­படும் இனங்­களில் ஒன்­றாக ரோஹிங்­ய முஸ்­லிம்கள் இருக்­கின்­றனர். ரோஹிங்­ய முஸ்­லிம்­க­ளுக்கு ஏரா­ள­மானோர் ஆத­ரவு தெரி­வித்­தனர். வங்­க­தேச மக்கள் காட்­டிய இரக்க குணத்­தாலும், தாராள மன­தாலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் காப்­பாற்­றப்­பட்­டனர் என அவர் தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே வங்­க­தே­சத்தில் தஞ்சம் புகுந்­துள்ள ரோஹிங்­ய முஸ்­லிம்­களைத் திரும்ப தங்கள் நாட்­டுக்கு அழைத்துக் கொள்ள மியன்மார் கடந்த ஆண்டு நவம்­பரில் ஒப்­புக்­கொண்­டது. ஆனால் வங்­க­தே­சமும், மியன்­மாரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக் கொண்ட தால் அந்த முயற்சி தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

தங்களின் உரிமை, குடியுரிமை, பாதுகாப்பு ஆகியவை திரும்பக் கிடைப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே மீண்டும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியும் என்று ரோஹிங்ய முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com