தமிழ் සිංහල English
Breaking News

பிரித்தானியாவில் மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த மனிதன் .!

பிரித்தானியாவில் மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த மனிதனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் “பயோனிக் உறுப்பு” பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் Greater Manchester பகுதியை சேர்ந்தவர் Andrew Wardle (44). மர்ம உறுப்பு இல்லாமல் பிறந்த Andrew-விற்கு சிறுநீர்ப்பை, கருப்பைக்கு வெளியே உருவாகி இருந்தது.

மேயோ கிளினிக் அறிக்கையின்படி உலகில் 2 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய, இத்தகைய பிரச்சனையால் மனமுடைந்த Andrew, மனசோர்வில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கூட தள்ளப்பட்டுள்ளார்

இறுதி முயற்சியாக தன்னுடைய வாழ்க்கையினை மாற்றி எழுத முடிவு செய்த Andrew, கடந்த 2012-ம் ஆண்டுலண்டனில் UCLH ல் உள்ள சிறுநீரக சிறப்பு நிபுணர் ஒருவரை சந்தித்து, தன்னுடைய குறைகளை பற்றி கூறியுள்ளார்.

அங்கு மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த சிறுநீரக நிபுணர், நிச்சயமாக சிறுநீர்ப்பை மற்றும் மர்ம உறுப்பை உருவாக்க முடியும் என Andrew-விற்கு உறுதியளித்தார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று, Andrew-வின் இடது கையில் இருந்து, தோல் மற்றும் தசைகள் எடுக்கப்பட்டன. அவரது காலில் இருந்து ஒரு நரம்பு எடுத்து மர்ம உறுப்பு வெற்றிகரமாக உருவாக்கி பொறுத்தபட்டது.

இந்திய மதிப்பில் ரூ.4.48கோடி செலவில் உருவாக்கப்பட்ட பயோனிக் உறுப்பு அறுவை சிகிச்சையே உலகின் மிகவும் விலை உயர்ந்த அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து Andrew கூறுகையில், மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண ஒரு விஷயம் தான். ஆனால் என்னைப் பொறுத்தவ்ரை இது ஒரு சாதனை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். விரைவில் எனது காதலி Fedra Fabian உடன் வாழ்க்கையை துவங்குவேன் எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com