தமிழ் සිංහල English
Breaking News

செர்பியாவை வீழ்த்தி கிண்ண கனவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணி..!

2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 4 போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

அதன்படி எஃப் குழு அணிகளான மெக்ஷிகோ, சுவீடன் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுவீடன் அணி 3க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதே குழுவில் இடம்பெற்றுள்ள தென்கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்கொரிய அணி 2 க்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு செம்பியனான ஜேர்மன் அணி தொடரில் இருந்து வெளியேரியது.

இதேவேளை, ஈ குழுவில் இடம்பெற்றுள்ள சேர்பியா மற்றும் பிரேசில் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில், பிரேசில் அணி 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.

அதுபோல் சுவிட்சர்லாந்து மற்றும் கொஸ்டரிகா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

எனினும் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

இதனிடையே, இன்றைய தினமும் மேலும் நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குழு ஜீ யில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டியும், பனாமா மற்றும் தூனிசியா அணிகளுக்கு இடையிலான போட்டியும்.

குழு எச் சில் இடம்பெற்றுள்ள ஜப்பான் போலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், செனகல் கொலம்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com