தமிழ் සිංහල English
Breaking News

மறக்காமல் இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்!

குழந்தைகள் நலம்:உங்கள் குழந்தையும் நீங்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதில்லையா?

நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள்.

ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன, அதிலும் குறிப்பாக வாலிப வயதினரை!

கவலை வேண்டாம். உங்கள் இக்கவலையை போக்க சில வழிகள்…

1. நீ நீயாய் இரு

குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்காது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடுங்கள்.

2. இலக்கை அடைந்ததும் தகவல் அனுப்பு

இது வாலிப குழந்தைகளுக்குப் பொருந்தும். அவர்கள் ஏதேனும் பயணங்கள் மேற்கொள்ளும் போது, நண்பர்களுடன் செல்லாதே, தனியே செல்லாதே, இப்பொழுது எங்கு இருக்கிறாய்,அப்படி இப்படி என்று அடிக்கடி போன் செய்து எரிச்சலுயூட்டுவதை விடுத்து, “இலக்கை அடைந்ததும் தகவல் அனுப்பு” என்று கூறுங்கள்.

3. இன்று நாள் எப்படி?

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று வினவி அவர்தம் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

4. உணவை வீணாக்காதே!

எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் அனைத்து உணவையும் குப்பையில் கொட்டுவதில்லை. ஆகையால் உணவு உண்பது குறித்து உபதேசிக்காமல், சுருக்கமாக எடுத்துரையுங்கள்.

5. உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?

நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என உங்கள் கருத்தை வலியுறுத்தாது, குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு அறிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.

6. கை விடாதே!

நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.

7. அன்பே சர்வம்..!

உங்கள் குழந்தைகள் ஏதேனும் குறும்பு புரிந்தாலோ, குறைவான மதிப்பெண் பெற்றாலோ அவர்களை அடிக்காது, அன்பால் அரவணையுங்கள்..!

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com