தமிழ் සිංහල English
Breaking News

இவர் எனக்கு மட்டும் முத்தம் கொடுக்க வில்லை.!

நடிகர் கார்த்திக் பெரும்பாலும் அதிக படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அநேகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதற்கு அடுத்து 3 ஆண்டுக்கு பிறகு இவர் தானா சேர்ந்த கூட்டம் என்னும் படத்தில் நடித்து உள்ளார்.

அந்த படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது அவரது மகன் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் திரு அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை லலிதா, ஜி.தனஞ்செயன் மற்றும் எஸ்.விக்ரம்குமார் அனைவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

நேற்று இந்த இப்படக் குழுவினர் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த பேட்டியில் கவுதம் கார்த்திக் ஊட்டியில் உள்ள பள்ளியில் தான் நான் சிறுவயதில் படித்தேன் என கூறியுள்ளார்.

அதனால் என்னுடைய தந்தையின் நடிப்பை நான் பார்த்ததில்லை என்றும் அவரது நடிப்பை பற்றி நான் கேள்வி மட்டும் பட்டிருக்கிறேன் ஆனால் நான் நேரில் பார்த்ததில்லை என கூறியுள்ளார்.

தற்போது எனக்கு அந்த வாய்ப்பு மிஸ்டர் சந்திரமவுலி என்னும் இந்த படத்தில் கிடைத்து உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அந்த படத்திலும் அவரது மகனாகவே நான் நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அவரது மறுபக்கத்தை நன்கு என்னால் பார்க்க முடிந்தது எனவும் கூறியுள்ளார்.

இந்த படத்தை பற்றி நடிகை ரெஜினா பேசும் போது, ஓவர் கிளாமராக நான் இந்த படத்தில் நடித்துள்ளேன் என பேசுகிறார்கள் எனவும் இந்த படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நான் நடித்தேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கவுதம் ஒரு நல்ல நடிகர் எனவும் அவர் இந்த படத்தில் காட்டிய ஈடுபாடு என்னையே வியக்க வைத்தது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவர் என் கன்னத்தில் மட்டும் தருவது இல்லாமல் எல்லோரையும் கட்டிப்பிடித்து அன்பாக முத்தம் தந்து அனைவரிடமும் பாசம் காட்டுவார் என கூறியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com