தமிழ் සිංහල English
Breaking News

உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா.!

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது புகழ் மேலும் கூடியது.

திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.

சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரிலேயே விரட்டிச்சென்று கண்டித்து கணவர் மூலம் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இவருக்கு இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்துக்கு இணையாக பட வாய்ப்புகள் குவிகின்றன.

ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். விளம்பரங்களிலும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.

மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com