தமிழ் සිංහල English
Breaking News

கல்யாணம் செய்யாமல் கூட அன்பு,காதல் பெறலாம்..!

“யங் மங் சங்” படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் மறு பிரவேசமாகியிருக்கும் லட்சுமி மேனன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் என்று கூறியிருக்கிறார்.

தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். 15 வயதில் நடிக்க வந்தவர். தொடர்ந்து விஷால், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி என ஒரு ரவுண்டு வந்தார் கோலிவுட்டில். சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.

அவரிடம் ஒரு கேள்வி:- திருமணம் பற்றி கேட்டதற்கு எனக்கு திருமண உறவில் நம்பிக்கை இல்லை. கல்யாணம் செய்து கொண்டால் தான் அன்பு, காதல் கிடைக்கும் என்று இல்லை. கல்யாணம் செய்யாமல் கூட அன்பு,காதல் பெறலாம். நான் சொல்வது மற்றவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அது எனக்கு மட்டும் புரிந்த விஷயம். நான் திருமணத்தை நம்பவில்லை என்றார்.

திருமணம் செய்து கொள்ளவும் மாட்டேன். அதற்காக எனக்கு வாழ்க்கை துணை இருக்காது என்று சொல்ல வரவில்லை. கண்டிப்பாக இருப்பார். துணை என்னும் வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேண்டும்.

அதைக் கல்யாணம் என்ற வார்த்தையில் சுருக்க விரும்பவில்லை. அதை “லிவ்விங் டு கெதர்”ன்னு கூட சொல்ல முடியாது என்று துணிச்சலாக கூறி இருக்கிறார்.

மேலும், வாழ்க்கையில் அனுபவம் தான் சிறந்த ஆசிரியர் என்று சொல்வேன். நான் திருமணம் பற்றி சொன்ன விஷயங்கள் அனுபவத்தால் மட்டுமே வந்தது இல்லை. அதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com