தமிழ் සිංහල English
Breaking News

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு:ஒருவர் படுகாயம்!

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை ஜம்பெட்டா வீதியில்  (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டிலேயே ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கி பிரயோகமானது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ‘கணேஷ்’ என்ற நபர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com