தமிழ் සිංහල English
Breaking News

குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்த திட்டம்..!

மீன் பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்புக்களை குறைத்துக்
கொள்ளுவதற்காக குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி சீனா மற்றும் மலேஷிய பிரதிசதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் போது இவற்றின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இதனை மேற்கொள்ளுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் போது அவற்றுக்கான கடன் வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி கூறினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com