தமிழ் සිංහල English
Breaking News

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம்.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாது காணப்படுவதாக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாடசாலையின் அதிபர் தெரிவிக்கையில்,இப் படாசாலையில் தரம் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புக்களில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையில் இட வசதிகளின்றி கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப் படாசாலையின் கட்டடங்கள் கட்டப்பட்ட காலத்திலிருந்து எவ்வித அபிவிருத்திகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தரம் 6 தொடக்கம் 8 வரையான வகுப்புக்களை கொண்ட கட்டடங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப் பாடசாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடமே அதிகம். இதனால் குறித்த இக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுடன் மழைக்காலங்களில் கூரை தகடுகள் அள்ளுண்டும் போயுள்ளது. அதனை மீண்டும் சீர் செய்தாலும் கட்டத்தை பாவிக்க முடியாத நிலையிலேயே உள்ளது.

இதேவேளை பாடசாலையில் மாணவர்களுக்கு தேவையான தளபாட வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளதுடன். அவ்வாறு காணப்படும் தளபாடங்களும் சேதமடைந்தும் உள்ளது.

மாணவர்களின் இட வசதியை நிவர்த்தி செய்யும் பொருட்டு தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தோட்டத்தில் உள்ள பொது சனசமூக நிலையத்தை பெற்று கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது போதிய வசதிகளை கொண்டதாக இல்லை.

இந் நிலையில் பாடசாலை நிர்வாகத்தினூடாக கல்வி அமைச்சுக்கு பல முறை கடிதம் மூலமும் நேரடியாகவும் சென்று கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் குறிப்பிடுகையில்,

பாடசாலையின் அதிபர் நிலவும் குறைபாடு சம்பந்தமாக என்னிடம் முறையிட்டிருந்தார். நான் இது சம்பந்தமாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன். அதற்கிணங்க விரைவில் பாடசாலையின் திருத்த பணிகள் மற்றும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com