தமிழ் සිංහල English
Breaking News

தொலைபேசி வெடிப்பதற்கு என்ன காரணம்?

வெடித்த தொலைபேசி பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் அமோரிக்காவில் இருந்தோ அல்லது ஐரோப்பாவில் இருந்தோ அல்லது மத்திய கிழக்கில் இருந்தோ அப்படியான செய்திகள் வருவதில்லை.

அது ஏன்?

தொலைபேசி வெடிக்கும் சம்பவங்கள் இந்தியாவிலேயே அதிகம் நிகழ்கின்றன. அதிலும் குறிப்பாக, தாழ்ந்த வருமானம் பெறும் குடும்பங்களிலேயே இது நிகழ்ந்துள்ளன.

இதை இரண்டு விதமாக பார்க்கலாம்.

1. அறிவார்ந்த முறையில்.

2. மேலோட்டமாக.

அறிவார்ந்த ரீதியில் இதை விளக்குவதாக இருந்தால்,

முதலில் தொலைபேசியின் எந்த பகுதி வெடிப்புக்கு காரணமாக இருந்தது என்பதை தேட வேண்டும்.

தொலைபேசி வெடிப்புகள் அனைத்தும் அதன் பற்றரி காரணமாகவே ஏற்படுகின்றது. தரம் குறைந்த பற்றரிகள் அல்லது, தரம் குறைந்த charging circuit + பற்றரி என்பவையே இந்த பற்றரி வெடிப்பை ஏற்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில், தரம் குறைந்த பற்றரி+ charging curcuit+ charger மூன்றும் இணைந்து வெடிப்புக்கு தேவையான நிலைமையை ஏற்படுத்தும்.

ஒரு பற்றரிக்கு தாங்கக்கூடிய உயர் மின்னோட்டத்தை விட அதிக மின்னோட்டம் பெறப்படும்போது, பற்றரி சூடாகி, வெடிக்கும்.

உலக நாடுகள் தொலைபேசிக்கான தரக்கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. உதாரணமாக, இலங்கையில் TRC அனுமதி இல்லாத தொலைபேசிகளை பகிரங்க சந்தையில் விளம்பரப்படுத்தி விற்க முடியாது. எனினும், இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மிக குறைவு. இருக்கின்ற சட்டங்களையும் இலகுவாக மீறலாம். இதன்காரணமாக இந்திய சந்தையை தரம் குறைந்த தொலைபேசிகள் ஆக்கிரமித்து உள்ளன. இதுவே வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன.

தரம் கூடிய, புகழ் பெற்ற brand களில் இப்படி வெடிப்புகள் ஏற்படுவதில்லை. Samsung இனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு model தொலைபேசியின் மிகச்சில தொலைபேசிகள் வெடித்தவுடன்,

1. Software update ஒன்றின் மூலம் battery charging capacity யை மாற்றியமைத்து தற்காலிக தீர்வையும்,

2. சந்தைக்கு வினியோகிக்கப்பட்ட அத்தனை தொலைபேசிகளையும் மீளப்பெறுதல் என்ற தீர்வையும் வழங்கியது நினைவில் இருக்கும்.

மேலோட்டமாக பார்த்து இதை விளக்குவதாக இருந்தால்,

“கார்ப்ரேட் கம்பனிகள்/இலுமினாட்டி/யூதர்கள் மனிதர்களை கொல்வதற்கு இதை சாதனமாக பயன்படுத்துகின்றன. தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட நோக்கமே மனித இனத்தை அழிப்பதுதான். அதை பாவிப்பது ஹராம்” என்றெல்லாம் விளக்கம் சொ

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com