தமிழ் සිංහල English
Breaking News

மலையகத்தில் வித்தியாசமான கோவா செடி..!

மலையகத்தில் 13 அடி உயரத்தில் வித்தியாசமான கோவா செடி ஒன்று வளர்ந்துள்ளது.

ஹட்டன் வில்ப்ரட்புர பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெர்ணான்டோவின் தோட்டத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வீட்டு பயன்பாட்டிற்காக சந்தையில் இருந்து கொண்டு வந்த கோவா செடியின் தண்டு ஒன்றை நட்டு வைத்துள்ளனர்.

அது காலப்போக்கில் இவ்வளவு உயரம் வளர்ந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக எவ்விதமான ரசாயன உர வகைகள் பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக கோவா செடி 3 அல்லது நான்கு அடி உயரத்தில் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com