தமிழ் සිංහල English
Breaking News

அமைச்சுப்பதவி பெற்ற தமிழ் தலைமைகள் ஏன் வெளியிலே வந்து போராட வேண்டும்.?

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் சம்பந்தமாக குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றம் இருக்கையில் அமைச்சுப்பதவி பெற்ற தமிழ் தலைமைகள் ஏன் வெளியிலே வந்து போராட வேண்டும்.? என்ன காரணம்? பாராளுமன்றம் இவர்களை மதிப்பதில்லையா? அல்லது தன்னு டைய கடமையை மறந்து செயல்படுகின்றனரா~? என பு.தொ.மு. தலைவர் முரளிரகுநாதன் இன்று நுவரெலியா பூல் பேங்க தோட்டத்தில் நடைப்பெற்ற மக்கள சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளதாக பு.தொ.மு. ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் இது சம்பந்தமாக முரளிரகுநாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.,

அண்மையில் முஸலிம் மதத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்து கலாச்சார பிரதி அமைச்சு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்திற்கு முன்பாக அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். அந்த ஆர்ப்பாட்டத்திலே எனது கவனம் பாராளுமன்றிலே அமைச்சுப் பதவி பெற்ற தமிழ் அமைச்சரின் அவரது கட்சியை சேர்ந்த கொழும்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இருவர் கலந்து கொண்டிருந்தனர் .

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் சம்பந்தமாக குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றம் இருக்கையில் அமைச்சுப்பதவி பெற்ற தமிழ் தலைமைகள் ஏன் வெளியிலே வந்து போராட வேண்டும்.? என்ன காரணம்? பாராளு மன்றம் இவர்களை மதிப்பதில்லையா?

அதேபோல் இன்றைய காலக்கட்டத்திலே மலையகத்திலே என்றும் இல்லாத சமூக சீர்கேடுகள் ., மலையக உறவுகளின் பிள்ளைகள் கடத்தல் ,கற்பழித்தல் போன்ற படு பாதக நிகழ்வுகள் ந டை பெற்ற வண்ணம் இருக்கின்றன. இது சம்பந்தமாக எந்த எதிர்ப்பு குரலும் பாராளுமன்றிலே ஒலிப்பதில்லை. மாறாக அமைதி  காத்து வருகின்றனர்.

இவைகளை சமூக ரீதியாக அறியத்தருவதும் தெளிவுப்படுத்தி உண்மையை ஒலிக்கச்செய்வது பாராளுமன்றிலே இருக்கின்ற தமிழ் தலைமைகளின் கடமை. மாறாக அமைச்சு பதவிகளின் பின் மௌனம் காப்பதல்ல என முரளிரகுநாதன் மேலும் கருத்து தெரிவித்துள்ளதாக பு.தொ.மு. ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com