தமிழ் සිංහල English
Breaking News

“எமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன..!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கூறி தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யிலான செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது என, முன்னாள் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வெல சம்பவம், இதற்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றது

இதன் போது கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ , “எமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்பைப் போன்று தனிநபர் பாதுகாப்பு குறித்தும் கவனத்தில் கொள்கின்ற நிலையே தற்போது உலகில் காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. தனிநபர் சுதந்திரம், தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. ஆனால் எமது ஆட்சி காலத்தில் காணப்பட்ட சூழல் இத்தகைய சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகவே அமைந்தது.

உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புடனேயே நாங்கள் போரிட்டோம். எனவே தான் தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் குறைபாடுகள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ரத்துபஸ்வல சம்பவம், மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் ஏற்பட்ட சம்பவங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது.  தேர்தல் காலங்களில் மேடைகளுக்கு தீ வைத்தனர். இவற்றை தற்போது கவனத்தில் கொள்ளும் போது ஒரு சூழ்ச்சியின் பின்னணியாகவே கொள்ள முடிகின்றது.” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com