தமிழ் සිංහල English
Breaking News

18 MLA-க்கள் தகுதி நீக்கம் செல்லும் ஆனால் செல்லாது .!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு 18 MLA-க்கள் தகுதி நீக்கம் சம்மந்தமாக இன்று இரு வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்றார்; மற்றொருவர் செல்லாது என்றார்.

எனவே சட்டப்படி, தகுதி நீக்கம் செல்லுமா அல்லது செல்லாதா என்பதை மூன்றாவது தனி நீதிபதியின் தீர்ப்பு தான் தீர்மானிக்கும்.

இதனால் உடனடி பயனாளி எடப்பாடியும், அவரை ஆதரிக்கும் இல்லை-அவர்-ஆதரிக்கும் மோடியும் தான்.

அநேகமாக மூன்றாவது நீதிபதி யார் என நியமிக்கப்பட்டு, அவர் பல தரப்பு நீண்ட வாதங்களையும் கேட்டு தீர்ப்பு சொல்வது உடனடியாக நடக்கப்போவதில்லை. அதற்குள் தலைமை நீதிபதி அவர்கள் அநேகமாக உச்சநீதிமன்றம் செல்லலாம். இதற்கு எவரேனும் வேறு ஏதாவது பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

எது எப்படியோ, எடப்பாடி அரசின் மேல் நம்பிக்கை இல்லை என வாக்களித்த OPS துணை முதல்வர்; அதிமுக அரசின் மேல் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் எடப்பாடி தலைமையின் மேல் நம்பிக்கை இல்லை என வெறும் கடிதம் எழுதிய 18 MLA-க்கள் தகுதி நீக்கம்!

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com