தமிழ் සිංහල English
Breaking News

கடினபந்து கிரிக்கெட்டில் மீண்டும் புத்துயிர் பெற்று வரலாற்று சாதனை படைத்தது ஸாஹரா கல்லூரி..!

 

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடாத்தும் 17 வயதுக்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாறை சந்தாதிஸ்ஸ பாடசாலையை எமது ஸாஹிறா கல்லூரி அணி 399 ஓட்டங்களால் வெற்றி கொண்டு சுற்றுப்போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டி 13/06/2018 காரைதீவு கனகரட்டினம் இடம்பெற்றது, நணயசுலட்சியில் வெற்றி பெற்ற சந்தாதிஸ்ஸ அணித்தலைவர் ஸாஹிறா கல்லூரியை துடுப்பெடுத்தாட பணித்தார், போட்டி மத்தியஸ்தர்களால் 43 ஓவர்கலாக மட்டுப்படுத்தப்பட்டது, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி அணி 43 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 437 என்ற இமாலய இலக்கை அடைந்தனர், 438என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சந்தாதிஸ்ச அணயினர் 10.5ஓவர் நிறைவில் 38 ஓட்ங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது, இறுதியில் ஸாஹிறா கல்லூரி அணி 399 ஓட்டங்களால் அபாரமாக வரலாற்று சாதனையுடன் வெற்றியை பதிவு செய்தது.

இதில் அணித்தலைவர் அதீப் 150 ஓட்டங்களையும், றுஸ்தி ஆட்டமிழக்காமல்173* ஓட்டங்கள், ரிஸ்திக் 30 ஓட்டங்கள், சாஹில்19 , சஜாத் 22 ஓட்டங்களையும் பெற்றனர், பந்துவீச்சில் அஸ்பாக் 5 விக்கெட்டுகளையும், சஜாத் 2 விக்கெட்டுகளையும் ஜுஸைல் 1விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்கு பங்காற்றினர்,.

இருவருட காலம் கடினபந்து துறை மிகவும் பின்தங்கி இருந்த நிலையில் விளையாட்டு பொறுப்பாசிரியர் அலியார் பைஸரின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக மீண்டும் ஸாஹிறா கல்லூரி கடினபந்தாட்ட துறையில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

இவ் வெற்றியினை பெற உழைத்த கல்லூரி வீரர்களையும் அவர்களை நோன்பு காலமும் சிறமப்பட்டு வழிப்படுத்தி பயிற்றுவித்த அலியார் பைஸர் ஆசிரியரையும் வீரர்களை வழிப்படுத்தி ஒழுங்கு படுத்திய ஆசிரியர் ரகீப் அவர்களையும் மற்றும் அனைத்தையும் வழிப்படுத்திய கல்லூரியின் முதல்வர் அவர்களையும் பாடசாலை அபிவிருத்தி குழு, பழையமாணவர்கள் , ஆசிரியர் குழாம் மற்றும் கல்லூரி சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com