தமிழ் සිංහල English
Breaking News

21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில்.!

21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில், வரும் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன.

தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற ரஷ்யா, அர்ஜெண்டினா, பிரேசில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், உள்ளிட்ட 31 அணிகள் உலகக் கிண்ண போட்டியில் நுழைந்துள்ளது. இந்நிலையில், போட்டியை நடத்தும் அணி என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், சரன்ஸ்க் உள்ளிட்ட 11 மைதானங்களில் நடைபெற உள்ளது.

இதில், லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் மட்டுமே புனரமைக்கப்பட்டவை. மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அதில், மர்டோவியாவில் உள்ள சரன்ஸ்க் மைதானம் பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் குரூப் B, C, G மற்றும் H பிரிவில் உள்ள போட்டிகள் நடைபெற இருக்கிறது. டென்மார்க், கொலம்பியா, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட அணி வீரர்கள் இங்கு விளையாட உள்ளனர். உலகக்கோப்பை தொடருக்காக அந்த நகர் முழுவதுமே ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்திற்கு அருகே புதிய விமானநிலைய முனையம் கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் போட்டியைக்காண வரும் ரசிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு விமானச் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. உலகக்கோப்பை தொடரின் போது மணிக்கு 300 முதல் 600 பேர் வரை

நகருக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் வந்து தங்கும் இடத்தில் பிரத்யேக நீச்சல் குளம், நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானத்திற்கு அருகே பழமையான தேவாலயங்கள் உள்ளன. மேலும், சர்வதேச தரத்தில் மைதானம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக 45ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் முடிந்த பிறகு, 28ஆயிரம் இருக்கைகளாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மைதான செலவுக்காக மட்டும் ரஷ்யா சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் 2,700 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, 257 கோடி ரூபாய் கிடைக்கும்.

ஜூன் 14ஆம் திகதி தொடங்க உள்ள இந்த தொடரின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 500 உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதுவரை உலக்கோப்பையை நடத்திய நகரங்களின் பெயர்களும், உலக கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப் பூர்வ சின்னமான சாம்பி வாகா என்ற ஓநாயின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸின் இசை நிகழ்ச்சியுடன் இந்த விழா துவங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிரபல ரஷ்ய இசைக் கலைஞரான அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் ‘Live It Up’ எனும் உலகக் கிண்ண பாடலை பாட உள்ளனர்.

மேலும் வீரர்கள் சார்பில், இரண்டு முறை பிரேசில் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com