தமிழ் සිංහල English
Breaking News

பாடசாலையில் அதிபர்,ஆசிரியையின் தகாத உறவைப் பார்த்த மாணவன் .!

இலங்கையில் கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக அதிபர் ஒருவருக்கும் பாடசாலையின் பெண் உப அதிபருக்கும் இடையில் தகாத உறவுமுறை ஒன்று இருந்துவந்துள்ளது.

அன்று முதல் மூன்று பாடங்கள் நிறைவுபெற்ற நேரம் வழமையை போன்று பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் மாணவர் ஒருவர் வெண்கட்டிகளை எடுத்து வருவதற்காக பாடசாலை அதிபரின் அலுவலக அறைக்கு சென்றுள்ளார்.

அதிபரின் அறைக்குள்  உரையாடும் சத்தம் மாணவருக்கு கேட்டுள்ளது.

மாணவன் நகராமல் அதிபரின் அறையினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபராக கடமையாற்றும் ஆசிரியை ஒருவரும் தகாதவிதமாக நடந்துக்கொண்ட சம்பவத்தினை பார்வையிட்டுள்ளார்.

அச்சமுற்ற மாணவன் குறித்த சம்பவத்தினை பொருட்படுத்தாது இரகசியமாய் தனது நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான தகவல்கள் மாணவர்களிடையே பகிரப்பட்டு வேகமாக பரவியுள்ளது.

சில ஆசிரியர்களின் செவிக்கும் குறித்த சம்பவம் சேர்ந்த நிலையில், அதிபர் மற்றும் உப அதிபரான ஆசிரியைக்கும் தெரியவந்துள்ளது.

தகாத செயலை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த மாணவரை அதிபர் மற்றும் உப அதிபராக கடமையாற்றும் ஆசிரியை குறித்த மாணவனை தனியாக அலுவலகத்திற்கு அழைத்து வந்ததோடு, தகாத வார்த்தைகளால் நிந்தித்துள்ளதுடன், அதிபரை மாணவர் தாக்கியுள்ளார் எனவும், மாணவரின் நடத்தை பாடசாலை விதிகளுக்கு முரணானது என தெரிவித்தும் அவரை பாடசாலையிலிருநது விலக்கியுள்ளனர்.

குறித்த மாணவன் கல்வி விளையாட்டு என அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தவர் என பெற்றோர் கூறியுள்ளனர்.

சம்பவத்தினை முழுமையாக பெற்றோர் எதிர்த்ததுடன், குறித்த இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர் வலயக்கல்வி மற்றும் மாகாண கல்வி பணிமனைகளில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய கல்வி பணிமனை அதிகாரிகள் அதிபர் மற்றும் உப அதிபராக கடமையாற்றும் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும் மாணவனுக்கு ஆசிரியை மற்றும் அதிபரால் நேர்ந்த கொடுமைகள் குறித்து பின்னரே அறிவித்துள்ளார்.

மாணவன் குறித்த பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அதனால் அவர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

பாடசாலை அதிபர் குறித்த மாணவனை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றொரு ஆசிரியரால் தாக்குதல் நிறுத்தப்பட்டு மாணவர் அழைத்து செல்லப்பட்டதாகவும் மாணவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அத்துடன் தலைமயிர் அதிகம் எனவும், அதனை வெட்டுமாறு ஆசிரியை மாணவரை தாக்கியதாகவும், பாடசாலையிலிருந்து வெளியேறும் வரை ஏதேனும் முறைப்பாடுகளை தன்மீது சுமத்துவதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com