தமிழ் සිංහල English
Breaking News

பெண்கள் காதலை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் .!

பல யுகங்களாக ஆண்கள் என்ன தான் முன்னேறி வந்தாலும், எத்தனை கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக வந்தாலும் கூட, ஆண்களால் பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதனை மட்டும் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

பாவம் இந்த ஆண்கள் பெண்கள் மனதில் என்ன தான் இருக்கிறது என்பதை அறிவதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. இவ்வாறு கஷ்டப்படும் ஆண்களுக்கான பகுதி தான் இது.

என்ன தான் பெண்களது மனதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்றாலும் கூட, அவர்களும் சில சமயங்களில் சிலவற்றை உளறிவிடக் கூடியவர்கள் தான். பெண்கள் எப்போதும் மனதில் உள்ள காதலை வெளிப்படையாக கூறிவிட மாட்டார்கள்.

அதன் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.. ஒரு பெண் தன்னை காதலிக்கிறாராளா இல்லையா என்பதை கண்டறிவது என்பது ஆண்களுக்கு மிக மிக கடினமான விஷயம் தான் என்றாலும் கூட இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்றினால் அவர்களது மனதில் என்ன உள்ளது என்பதை கண்டறியலாம்.

பெண்கள் பொதுவாக, எடுத்த உடன் யாருக்கும் மெசேச் அனுப்பி விட மாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு தினமும் குட் மார்னிங், குட் நைட் என்று மெசேஜ் அனுப்புகிறார் என்றாலும், சாப்பிடீங்களா, தூங்குனீங்களா என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் அவர்களுக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தமாகும். அவருக்கு உங்கள் மீது அன்பு இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு அவர் மெசேஜ் அனுப்பும் போது நீங்கள் அவருக்கு லேட்டாக ரிப்ளை அனுப்பினால், ஏன் என்னும் ரிப்ளை அனுப்பவில்லை.. எந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் அவருக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று பொருள். யாருடன் பேசுகிறீர்கள் என்று கேட்டு சோகமடைந்தால் அவர் உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தம். அல்லது அந்த பெண் யார் என்று கேட்டு மகிழ்ச்சியாக விசாரித்தால் அவர் உங்கள் மீது தோழமையில் தான் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

பெண்கள் தங்களது தோழிகளை பற்றி ஆண்களிடம் என்ன வேண்டுமானலும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தங்களது குடும்பம் பற்றி அல்லது தன்னை பற்றிய இரகசியங்களை அனைத்து ஆண்களிடமும் எல்லாம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

அப்படி ஒரு பெண் அவரது வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டால் அவருக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தமாகும்.25

உங்களுக்கு அந்த பெண் உங்களை தோழனாக நினைக்கிறாரா அல்லது காதலனாக நினைக்கிறாரா என்பதை அறிந்து கொள்வது உங்களுக்கு சற்று கடினமான விஷயமாக இருந்தால், இந்த வழிமுறையினை வைத்து கண்டுபிடிக்கலாம்.

உங்களுடன் ஒரு நாள் பேச முடியவில்லை என்றால் கூட சோகமாக இருப்பது, அடுத்த நாள் உங்களுடன் பேசும் போது, அன்பாக பேசுவது, செல்ல சண்டைகள் போடுவது போன்றவை இருந்தாலும், உங்களுடன் பேசாத அந்த நாளில் என்னென்ன நடந்தது என்பது பற்றி உங்களிடம் கேட்டு விசாரித்தாலும் அவர் உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தமாகும்.

பெண்கள் தங்களது மகிழ்ச்சியான நேரத்தை தனக்கு பிடித்தவர்களுடன் செலவளிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் உங்களுடன் தங்களது மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுகிறார் மற்றும் அதிகப்படியான நேரத்தை உங்களுடன் செலவிடுகிறார் என்றால் அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என்று அர்த்தமாகும்.26

உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள். நீங்கள் எப்போதாவது சோகமாக இருந்தால், உங்களது முகம் மலர வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு பல நகைச்சுவைகளை கூறி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். உங்களது சந்தோஷத்திற்காக கோமாளியாகவும் கூட மாறினால் உங்கள் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.

பெண்கள் தனது ஆண் தன் மீது மட்டுமே ஈர்ப்பு கொண்டவனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதுவே உங்களை வேறு ஒரு பெண் கவர்ந்து விட்டால் என்று மட்டும் அவருக்கு தோன்றி விட்டால் அவ்வளவு தான். எரிமலையாக வெடித்து போவார்கள்.

 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com