தமிழ் සිංහල English
Breaking News

19 வயது இளம் பெண் ஒருவர் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய 17 வயது மாணவன் .!

தமிழகத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் திருமண ஆசை காட்டி என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக 17 வயது மாணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, என்னுடன் படித்த மயிலாடி பகுதியைச் சேர்ந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். பள்ளி படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் வேளாண்மை படிப்பில் சேர்ந்தேன்.

அவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தான். இப்படி சென்று கொண்டிருந்த போது, தனக்கு காலில் காயம் ஏற்பட்டதால், என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை.

இதனால் நான் கல்லூரிக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். இருந்த போதிலும் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

நாங்கள் தனிமையில் சந்தித்து பேசிவருவது இரு வீட்டாருக்கும் தெரிந்ததால், அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவன் போனில் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு, நான் உன்னை திருமணம் கொள்ள விரும்புகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்தான்.

இதைத் தொடர்ந்து சம்பவ தினத்தன்று அவன், கோட்டார் ரயில் நிலையத்துக்கு வரும் படி கூறினான். நானும் அங்கு சென்ற போது அவன் என்னை பேருந்தில் அழைத்துக் கொண்டு ஈத்தாமொழியில் உள்ள அவனின் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு தனி அறையில் நாங்கள் தங்கிய போது எல்லை மீறிய அவன் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்தான். நாங்கள் தொடர்ந்து சில நாட்கள் அங்கு தங்கியதால், என்னுடன் பலமுறை வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டான்.

ஒரு கட்டத்தில் நாங்கள் இருக்கும் இடம் அவனின் பெற்றோருக்கு தெரிந்ததால், அவர்கள் வந்து அவனை மட்டும் அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் நான் என்னை அழைத்துச் செல் என்ற போது என்னை விட்டு சென்றுவிட்டான்.

அதன் பின்பே அவன் என்னை திருமண ஆசைகாட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்ற உண்மை தெரியவந்தது. இதனால் தனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றிய அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த மாணவனுக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை அறிந்துள்ளனர். இருப்பினும் மாணவன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com