தமிழ் සිංහල English
Breaking News

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா தலைவர் திட்டம் .!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு துருவங்களான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார்.

இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா தலைவர் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com