தமிழ் සිංහල English
Breaking News

பசுவும் எருமையும் சேர்ந்த கலவையே நல்லாட்சி .!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதானது, பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் இணைவானது பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது என்றும், இதில் எவ்வித பொருத்தமும் இல்லை என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களை திருடன் என்று குற்றம் சுமத்தியபோதிலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களையே திருடன் என்று கூறும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டின்னார்.

அர்ஜுன் அலோஸியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com