தமிழ் සිංහල English
Breaking News

சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி?

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி.  அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது நான்கு மகள்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில்,  ஒரு மகளோடு உடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்றும், அடுத்த படத்தில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்றும், மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள் அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் இருந்தது. அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர், உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி? வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு, குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள், மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள், நீங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் உண்மை தான் வீட்டில் எடுத்ததா? இல்லை வெளியில் எடுத்ததா என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அதன் அருகே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com