தமிழ் සිංහල English
Breaking News

முன்னாள் அமைச்சர் தயாசிறி சி.ஐ.டியில்..!

முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தற்சமயம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு திணைக்கள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர புறக்கணித்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைகப்பட்டிருந்த நிலையில், அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com